தேசியக் கொடி நிறங்களில் மதிய உணவு! பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் அவசியம்!

தேசியக் கொடி நிறத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.சத்தும் சுவையும் அவசியம்
healthy school lunch ideas
healthy school lunch ideasImg credit: AI Image
Published on

குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் போது நல்ல சத்தாகவும், குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் அளவுக்கு சுவையாகவும், இருப்பது அவசியம்.

ஐந்து ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிடுவதற்கு, சிரமப்பட்டாலோ ஆர்வம் காட்டாமல் இருந்தாலோ அவர்களுக்கு இட்லி, தோசை, உப்புமா கொடுத்து விடுவது தவறு.

குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற உணவு தர வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை அவர்களின் எடைக்கு தகுந்த உணவு தருவது அவசியம். நொறுக்கு தீனியாக பழங்கள், பழச்சாறு, சுண்டல், கடலை மிட்டாய், எள்ளுருண்டை, கேரட் வெள்ளரிக்காய் துண்டுகள் தரலாம்.

வயதுக்கு ஏற்ற உடல் எடை உயரத்துடன் குழந்தை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். எடை குறைவாக இருந்தால் குழந்தைக்கு தேவையான கலோரி, புரதம் இவற்றைத் தர வேண்டும். மூன்று வேளைக்கு பதிலாக நான்கு வேளை தரலாம்.

ரத்த சோகை, பசியின்மை, எடை குறைதல், சோர்வு, படிப்பில் கவனம் குறைவது, விளையாட்டிலும் ஆர்வம் இல்லாதது போன்றவை இதன் அறிகுறிகள். மண், பல்பம், அரிசி சாப்பிடும் பழக்கம், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதது, முக வீக்கம், கண், நாக்கு, வாய், உதடுகள் வெளிறி போய் இருத்தல், கை, கல், பாதம் வெளுத்து இருப்பது இவை இரத்த சோகைகளுக்கான அறிகுறிகள்.

ரத்த சோகை எதனால் வருகிறது?

ரத்த சோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஊட்டச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவால் வரும் ரத்த சோகை தான் பொதுவானது. போதிய ஊட்டச்சத்து தராதது, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் தராதது, இரண்டு வயது வரை பால் மட்டுமே தருவது, குடல் புழுக்கள் இருப்பது... இவையெல்லாம் ரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
காபி குடிப்பதற்கும் நல்ல நேரமா? 99% பேருக்கு இது தெரியாது!
healthy school lunch ideas

இரும்பு சத்து நிறைந்த வெல்லம், கருப்பட்டி, பச்சை காய்கறிகள், பழங்கள், பேரிச்சம்பழம், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றை தினசரி உணவில் தர வேண்டும்.

விட்டமின் ஏ குறைபாடு முன்பு இருந்த அளவுக்கு இல்லை என்றாலும் இன்றும் விட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளிடம் காணப்படுகிறது. விட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகள் என்றால் நம் தேசியக் கொடி நிறத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு நிறம்: ஆரஞ்சு, பப்பாளி, ஆரஞ்சு, கேரட், மாம்பழம் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளை நிறம்: பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை

பச்சை நிறம்: பச்சை நிற காய்கறிகள்.

நீல நிறம்: மீன் உள்ளிட்ட கடல் உணவுகள்

இதையும் படியுங்கள்:
பெண்களே கவனிங்க! உங்கள் அந்தரங்க ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான்!
healthy school lunch ideas

ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலும் அதன் பின் தாய்ப்பாலுடன் இணை உணவாக காய்கறிகள், பழங்கள், பால் என எல்லாவித உணவுகளும் தரும்போது வயதுக்கேற்ற எடை, நல்ல மூளை வளர்ச்சி உடன் குழந்தைகள் வளர உதவும். இதுவே குழந்தைகளுக்கான சரிவிகித உணவு.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com