ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான இரகசியம்!

Japanese diet
Japanese diet
Published on

ஜப்பானியர்கள் எப்படி தங்கள் உடல் எடையை பராமரித்து, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் என்று நாம் ஒருமுறையாவது எண்ணி ஆச்சர்யப்பட்டிருப்போம். அதற்கான முக்கிய காரணம் ஜப்பானியர்களின் உணவுமுறை பழக்க வழக்கங்கள்தான்.

1. பாரம்பரிய உணவுகள்:

ஜப்பானியர்கள் பாரம்பரியமாக வீட்டில் சமைக்கும் உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள். மீன், அரிசி, காய்கறிகள், புளிக்க வைத்த உணவுகள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். ஜப்பானியர்கள் மீன்கள் அதிகம் விரும்பி உண்பார்கள். அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டு இயற்கையான ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துகின்றனர்.

2. மெதுவாக சாப்பிடுதல்:

ஜப்பானியர்களின் உணவின் அளவு குறைவாகவே இருக்கும். ஆனால், இவர்களின் உணவில் புரதம், காய்கறிகள், கார்ப்போஹைடரேட் போன்ற சத்துக்கள் சமச்சீராக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர்கள் மெதுவாக சாப்பிடும் கலாச்சார நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதனால் இவர்கள் அதிகமாக உணவை எடுத்துக்கொள்ளாமல் குறைவான அளவில் சாப்பிடுவதால் கலோரிகளும் குறைவாகவே உடலில் சேர்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 6 உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாம்!
Japanese diet

3. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்:

ஜப்பானியர்கள் பருவக்காலத்தில் தயாரிக்காப்படும் புதிய உணவுகளையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக இவர்கள் தவிர்ப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

4. உடற்பயிற்சியின் முக்கியத்துவம்:

ஜப்பானியர்கள் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பேருந்தில் செல்லுதல், நடந்து செல்லுதல், சைக்கிள் பயன்படுத்துவது போன்ற செயல்பாட்டில் ஈடுப்படுவார்கள். மேலும் தோட்டக்கலை, நடைப்பயணம் போன்றவற்றை செய்வதால் கலோரிகளை குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
எத்தனை முயன்றும் உடல் எடையை குறைக்க முடியலையா? இருக்கவே இருக்கு...
Japanese diet

5. கிரீன் டீ:

ஜப்பானியர்களையும், கிரீன் டீயையும் பிரிக்க முடியாது. ஜப்பானியர்கள் ஒருநாளைக்கு அடிக்கடி கிரீன் டீ குடிக்கும் வழக்கத்தை வைத்திருர்கிறார்கள். கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் கேடசின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.

எனவே, நீங்களும் இதுபோன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால், ஜப்பானியர்கள் போல ஸ்லிம்மாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com