

மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. ஒன்றில் என்ன நடந்தாலும் அது மற்றதை பாதிக்கும். மன அழுத்தத்தில் இருக்கும் போது பதட்டமாக உணர்வது, சோர்வாக உணரும்போது அது உடலில் எதிர்மறையான உணர்வுகளை தூண்டுகிறது. இதயம் வேகமாக துடிக்கிறது; மூச்சு இறைக்கிறது; தசைகள் இருக்கமடைகின்றன; சக்தி இல்லாமல் போய்விட்டதாக உணர்கிறோம். இத்தகைய செயல்கள் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும் ஒரு வழிமுறைதான் எளிய வகை உடற்பயிற்சி ஆகும் (stress relief).
மன அழுத்தம், கவலை போன்றவை சிறிது நேரம் இருந்தால் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. அதே சமயம் அவை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் அட்ரினலின் கார்டிசைன் போன்ற மன அழுத்தங்கள் ஏற்படும்.
மன அழுத்த ஹார்மோன்கள் ரத்தத்தில் தேங்கி உடல் பதற்றமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது என்டோரபின்கள் உட்பட ரசாயனங்கள் வெளிப்படும். இவை மூளைக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற சமிக்கைகளை அனுப்புகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும்; பதற்றம், தசைகளில் உள்ள இறுக்கம் குறைந்து சகஜ நிலைக்கு வருகின்றன.
மூளையின் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் ரத்தம் வழியாக உடல் உறுப்புகளுக்கு சென்று நிதானமாக சிந்திக்க முடிகிறது.
மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளவர்களுக்கு கற்றல், நினைவாற்றல், பகுத்தறியும் திறன் கொண்ட ஹிப்போகாம்பஸ் ஃப்ரீ பிராண்டில் கார்டெக்ஸ் முன் மூளையின் செயல்பாடு குறைவாக இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் இதன் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம். இவை தவிர நேர்மறை உணர்வை ஏற்படுத்தும் ரசாயனங்களை மூளை அதிக அளவில் சுரக்கத் தூண்டும்.
உடற்பயிற்சி செய்யும் போது மூளை என்டோர்பின், Serotonin, டோப்போமைன் போன்ற மகிழ்ச்சி தரும் ரசாயனங்களை சுரக்கிறது.
என்டார்பின்கள் இயற்கையான வலி நிவாரணிகளாக செயல்படுகின்றன. ஆரோக்கியமான தூக்கம், பசியை Serotonin ரசாயனம் ஒழுங்குபடுத்துகிறது. நடைப்பயிற்சி உடற்பயிற்சி முடிந்ததும் நிம்மதியான மன உணர்வை டோபோமைன் தருகிறது.
தினசரி உடற்பயிற்சி செய்யும் போது இவை இயற்கையாக சுரந்து கார்டிசால் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன் சுரைப்பை குறைக்கின்றன.
ஆழ்ந்த தூக்கம், மன நிம்மதி எனப்படும் உடலின் கடிகார சுழற்சியை சீராக்க ஒவ்வொரு முறை நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யும் போது என்னால் என்னை கவனித்துக் கொள்ள முடியும் என்று உணர்வு ஏற்படுகிறது. காலப்போக்கில் இது வேலை, உறவுகள், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல், உடல் உணர்வு ரீதியான சவால்களை சமாளிக்க உதவுகிறது.
உடற்பயிற்சி என்றதும் தீவிரமான ஜிம் பயிற்சிகள், பழுதூக்குதல், மாரத்தான் ஓட்டம் என கற்பனை செய்ய வேண்டாம். உண்மையில் மன அழுத்தத்திற்கு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் போதும். இவை தவிர சைக்கிள் ஓட்டுதல், விருப்பமான பாடலுக்கு ஆடுதல், வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகள் உடன் விளையாடுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.
மனச்சோர்வு, மனப்பதற்றம், மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி பற்றிய எண்ணம் கூட அதிக சுமையாக தோன்றலாம்.
தினசரி 10 நிமிட நடை பயிற்சி கூட உங்கள் மனநிலையை சரிப்படுத்தும். எனவே, ஆண் பெண் இருபாலரும் தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் நடை பயிற்சியும் எளிய உடற்பயிற்சிகளும், சைக்கிள் ஓட்டுதல், நடனம் ஆடுதல், வீட்டு வேலைகள் செய்தல் போன்றவற்றின் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)