உங்களுக்கு இருப்பது நிஜப்பசியா? 'கண்'பசியா? கண்டுபிடிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் போதும்!

A man looks at the tempting food
food cravingImg credit: AI Image
Published on

டயட் இருக்க முடியாமல் உணவு கிரேவிங் (food craving) மற்றும் டயட்டை முறியடிக்கும் வகையில் உணவை பார்த்தவுடன் சாப்பிட தோன்றுகிறதா? இது மிகவும் இயல்பானது தான். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பசி, மனநிலை, ஹார்மோன்கள், பழக்கங்கள் அல்லது அந்த உணவினுடைய மணம், தோற்றம், சுவை போன்றவை நாவின் சுவை மொட்டுகளையும், மூளையையும் தூண்டுவதால் தான் இது ஏற்படுகிறது.

1) உணவு ஏக்கம்:

குறிப்பிட்ட உணவை உடனடியாக சாப்பிட வேண்டும் என்ற தீவிர எண்ணம் வருவது உணவு ஏக்கம் (Food Craving) எனப்படும். இதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவையே முக்கிய காரணங்களாகும்.

2) பசி ஹார்மோன்:

பசியாக இருக்கும் பொழுது க்ரெலின் (ghrelin) எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது உணவைப் பார்த்தவுடன் பசியைத் தூண்டி சாப்பிட தூண்டுகிறது.

உடல் ஆற்றல் தேவைப்படும் பொழுது, உணவுக்கான சமிக்ஞையை மூளைக்கு அனுப்புவதன் மூலம் பசியை உணர்த்துகிறது. இதற்கு சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவது நல்லது. பசி இல்லாமல் இருக்கும்பொழுது எப்படிப்பட்ட அமிர்தமான உணவாக இருந்தாலும், கண்ணைக் கவரும் வகையில் நிறம், மணம், குணம் இருந்தாலும் அந்த உணவை தவிர்ப்பது விடுவது உடல் நலத்தை காக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
தயிரை அடுப்பில் வைப்பவரா நீங்கள்? அப்படிச் செய்யலாமா? அதிர்ச்சித் தகவல்கள்...
A man looks at the tempting food

3) மனநிலை:

மகிழ்ச்சியாக இருக்கும்போது இனிப்புகள், மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது காரமான அல்லது எண்ணெய் உணவுகளை சாப்பிடத் தோன்றும். எனவே மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் உணவு ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

4) பழக்கங்கள்:

குறிப்பிட்ட நேரத்தில் அல்லது சூழலில் உணவு (food) சாப்பிடும் பழக்கம் நல்லது. உணவை கட்டுப்படுத்தி சீரான நேரத்தில், சரியான இடைவெளியில் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். சமச்சீரான உணவை பின்பற்றுவது என்றுமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? - உங்கள் வயிற்றுக்குள் நடக்கும் விபரீதம் இதுதான்!
A man looks at the tempting food

5) சுவை மற்றும் மணம்:

சில நேரங்களில் உணவின் நிறம், மணம், சுவை ஆகியவை நம் மூளையைத் தூண்டி சாப்பிட வைக்கும். மூளை உணவின் நிறம், வடிவம் மற்றும் அழகைப் பார்த்து ஈர்க்கப்படுகிறது. இதனால் தான் உணவகங்களில் உணவை அழகாக அலங்கரிக்கிறார்கள். உணவின் மணம் மூளையில் உள்ள நினைவகத்தைத் தூண்டி, அந்த உணவின் சுவையை முன்கூட்டியே உணரச் செய்கிறது. உணவைப் பார்த்தவுடன் அல்லது அதன் வாசனையை நுகர்ந்தவுடன் நம் வாய் மற்றும் வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான எச்சில் மற்றும் என்சைம்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.

6) கிரேவிங்கை (craving) வெல்வதற்கான சில உபயோகமான குறிப்புகள்:

பசி இல்லாமல் உணவைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றினால் அது 'கண் பசி (Eye Hunger)' என்று அழைக்கப்படுகிறது. உண்மையான பசி இருக்கும்போது மட்டுமே சாப்பிடுவது நல்லது. நிஜமாகவே பசிக்கிறதா அல்லது வெறும் ஆசையா என்பதை அறிய ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துப் பார்த்தாலே தெரிந்து விடும்.

இதையும் படியுங்கள்:
வைட்டமின் 'சி' வேண்டுமா? ஆரஞ்சு பழத்தை விட பச்சை மிளகாய் தான் பெஸ்ட்!
A man looks at the tempting food

அதிகப்படியான பசி உணர்வு இருந்தால் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

சரியான நேரத்தில் சரியான அளவு உணவை (food) எடுத்துக் கொள்வது சிறப்பு. மிதமான உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது உணவுத் தேர்வுகளை மேம்படுத்தவும் உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com