சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இப்படி சாப்பிடுங்கள்!

Manage Blood Sugar Levels through Diabetic-Friendly Eating
Manage Blood Sugar Levels through Diabetic-Friendly Eating

நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்த சக்கரை அளவைப் பராமரிப்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விக்கும் முக்கியமானதாகும். நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சீரான உணவு முறையைப் பின்பற்றுவதால், ரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. நீங்கள் நீரிழிவு நோயுடன் போராடி வரும் நபராக இருந்தால், உங்களது உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டாலே, சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்கலாம். சரி வாருங்கள் அதற்கான சில குறிப்புகளைப் பார்க்கலாம். 

கார்போஹைட்ரேட்டுகளில் கவனம் தேவை: கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்த சர்க்கரை அளவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், குளுக்கோசை இரத்தத்தில் மெதுவாக கலக்கும் கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்து உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது. இந்த உணவுகள் நிலையான ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகின்றன. 

பகுதிக் கட்டுப்பாடு: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவை சரியான இடைவெளியில் பிரித்து சாப்பிட வேண்டியது அவசியம். அதாவது நீங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறீர்கள் என்றால், அதே உணவை ஆறு வேலையாக பிரித்து சாப்பிடுங்கள். இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்வதைத் தடுக்கும். கீரைகள் ப்ரோக்கோலி மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் புரதச்சத்துக்கள் நிறைந்த கோழி, மீன் போன்றவற்றை வாரம் ஒருமுறை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

புரதங்கள் முக்கியம்: நீங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டாலும் அதை செரிப்பதற்கு புரதங்கள் மிகவும் அவசியமானவை. இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது. எனவே புரதம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பலவகையில் உதவும். மேலும் புரதங்கள் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவது குறையும். 

நீரேற்றத்துடன் இருங்கள்: உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ரத்த சர்க்கரை மேலாண்மைக்கும் அவசியம். தாகமாக இருந்தால் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சோடா, பழச்சாறுகள் மற்றும் இனிப்பு கலந்த தேநீர், காபி போன்ற சர்க்கரை பானங்களை தவிர்க்கவும். அவை உங்களது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தக்கூடியவை. நீங்கள் ஓர் இனிப்பு பிரியராக இருந்தால், சர்க்கரை குறைவாக இருக்கும் பழங்களை தேர்வு செய்து சாப்பிடுங்கள். 

பைபர் உங்கள் நண்பன்: அதிகம் ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உங்கள் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை கலக்கப்படுவது மெதுவாகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நார்ச்சத்து அதிகம் மிகுந்த காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட வேண்டாம். அவற்றிற்கு மாற்றாக சிட்ரஸ் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 
Manage Blood Sugar Levels through Diabetic-Friendly Eating

இந்த உணவுப் பழக்கத்தை நீங்கள் பின்பற்றுவதற்கு முன்பு, முறையான சுகாதார நிபுணறுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். அவருடைய வழிகாட்டுதலின் பேரில், உங்களுக்கான சரியான உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களது ரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com