குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் 🍦 கொடுக்கலாமா? சளி பிடிக்குமா? மருத்துவரின் உண்மை அறிக்கை!

ஐஸ்க்ரீம் பற்றிய பெற்றோர்களின் சந்தேகங்களும், குழந்தைகள் நல மருத்துவர் க. ராவணன் M.D அவர்களின் அவசியமான வழிகாட்டல்களும்!
Child with Ice Cream | ஐஸ்க்ரீம்
Child with Ice Cream | ஐஸ்க்ரீம்
Updated on
Q

டாக்டர், ஐஸ்க்ரீம் கொடுக்கலாமா?

Q

குளிர்ச்சியான உணவு சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

Q

ஐஸ்கிரீம் பால் கொண்டுதானே தயாரிக்கிறார்கள், எனவே ஆரோக்கியமானதுதானே?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஐஸ்க்ரீமும் ஒன்று. ஆனால் அது முற்றிலும் தீமையான உணவும் அல்ல; தினமும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய உணவும் அல்ல. அதிக அளவு, அடிக்கடி சாப்பிடுவது, அதில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்றவற்றைப் பொறுத்தே அதன் தாக்கம் அமையும்.

Q

ஐஸ்க்ரீமில் பால் இருக்கிறதே; அது முழுமையான சத்துணவா?

A

இல்லை. பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், புரதம் போன்ற சில சத்துக்கள் கிடைக்கலாம். ஆனால் ஐஸ்க்ரீமில் பொதுவாக சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கலாம். எனவே அதை பாலுக்குச் சமமான சத்துணவாகக் கருதக்கூடாது.

Q

அதிக சர்க்கரை குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

A

அதிகமான Free Sugars உணவில் தேவையற்ற கலோரிகளை அதிகரித்து, உணவின் ஊட்டச்சத்து தரத்தை குறைக்கலாம். அதிக சர்க்கரை உட்கொள்வது பல் சொத்தை ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உடல் பருமன் ஏற்படும்.

Q

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்குமா?

A

பொதுவாக ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் வைரஸ் சளி ஏற்படுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை. சளி, இருமல் போன்றவை பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. ஆனால் ஏற்கனவே தொண்டை வலி அல்லது இருமல் இருக்கும் குழந்தைக்கு மிகவும் குளிர்ந்த உணவு தரக் கூடாது.

Ice Cream | ஐஸ்க்ரீம்
Ice Cream | ஐஸ்க்ரீம்
Q

'Sugar-free' அல்லது 'low-fat' ஐஸ்க்ரீம் ஆரோக்கியமானதா?

A

இல்லை. Sugar-free என்றால் சர்க்கரை இல்லாதது அல்லது குறைவானது என்பதால் அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகிவிடாது. தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டிகள், கொழுப்பு மற்றும் மொத்த கலோரி அளவையும் கவனிக்க வேண்டும்.

Q

ஐஸ்க்ரீமில் இருக்கும் 'Hidden Additives' ஆபத்தானவையா?

A

எல்லா Additives-ம் ஆபத்தானவை என்று கூற முடியாது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட நிறமிகள், Stabilizers, Emulsifiers போன்றவை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அதிகமாக பதப்படுத்தப்பட்ட இனிப்பு உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்ல உணவுப் பழக்கமாகாது.

Q

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எப்படி?

A

குழந்தையின் முதல் ஆண்டுகளில் தேவையான கலோரி, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளே முக்கியம். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை இரண்டு வயது வரை தவிர்ப்பது நல்லது.

Q

எவ்வளவு ஐஸ்க்ரீம் கொடுக்கலாம்?

A

ஐஸ்க்ரீமுக்கு எல்லா குழந்தைகளுக்கும் ஒரே 'சரியான அளவு' என்று நிர்ணயிக்க முடியாது. ஆனால் அது தினசரி உணவாக இல்லாமல், எப்போதாவது சிறிய அளவில் வழங்கப்படும் Treat ஆக இருக்க வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சர்க்கரையின் அளவு அதிகபட்சம் 25 கிராமுக்குள் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தினமும் 30 நிமிடம் போதும்! குழந்தைகளை ஓடி ஆட விடுங்கள்; நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்!
Child with Ice Cream | ஐஸ்க்ரீம்
Q

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

A

ஐஸ்க்ரீமை முற்றிலும் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஐஸ்க்ரீமை குழந்தைக்கு பரிசாகவோ, அழுகையை நிறுத்தும் கருவியாகவோ பயன்படுத்தாதீர்கள். தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுத்தானியங்கள், பால் மற்றும் தேவையான புரத உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். குழந்தைகள் உட்பட அனைவரும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை-ஐ மொத்த ஆற்றலின் 5-10 சதவீத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உஷார் மக்களே... கிராம்பு தண்ணிய குடிச்சா உங்க உயிருக்கே பெரிய ஆபத்து?
Child with Ice Cream | ஐஸ்க்ரீம்

முடிவுரை

ஐஸ்க்ரீம் ஒரு 'விஷ உணவு' அல்ல… ஆனால் அது 'ஆரோக்கிய உணவு' என்றும் சொல்ல முடியாது.

குழந்தையின் கையில் இருக்கும் ஒரு சிறிய கப் ஐஸ்க்ரீம் பிரச்சினையல்ல.

அது தினசரி பழக்கமாக மாறுவதுதான் பிரச்சினை.

குழந்தைகளுக்கு இனிப்பை முற்றிலும் மறுப்பதைவிட, அளவோடு சாப்பிடும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பதே சிறந்த உணவுப் பாடம்.

logo
Kalki Online
kalkionline.com