நாம் உண்ணும் உணவு நம் உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதுடன் நம் வாழ்வின் தரத்தையும் தீர்மானிக்கிறது. எனவே, நாம் தினசரி எதுபோன்ற உணவுகளை சாப்புடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் தினசரி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படி சரவிகித உணவு முறையை நாம் பின்பற்ற வேண்டும். இந்தப் பதிவில் சரவிகித உணவு முறையின் முக்கியத்துவம் மற்றும் அது நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சரிவிகித உணவு என்பது நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் வழங்கும் உணவு முறையாகும். இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், நட்ஸ், விதைகள் போன்ற அனைத்து உணவு வகைகளும் சரியான விகிதத்தில் அடங்கியிருக்கும்.
சரிவிகித உணவின் நன்மைகள்:
சரிவிகித உணவு இதய நோய், நீரிழிவு, உடற்பருமன், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பி வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த சரவிகித உணவு, மன அழுத்தம், பதட்டம், மனசோர்வு போன்ற மன நோய்களைத் தடுத்து மனத்தெளிவை அதிகரிக்கிறது.
புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த உணவுகள் தசைகளை வலுப்படுத்தி, உடல் ஆற்றலை அதிகரித்து, உடல் திறனை மேம்படுத்துகிறது. இந்த உணவை சாப்பிடுவதால் செரட்டோனின் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, தூக்கம் சீராக்கி தரமான தூக்கம் கிடைக்கும்.
வைட்டமின் ஏ, சி, ஏ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த சரவிகித உணவு, சருமத்தை பொலிவாக வைத்து சுருக்கங்களைத் தடுத்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமானத்தை சீராக வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
சரிவிகித உணவு என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாத்து நீண்ட ஆயுளைப் பெற உதவும். எனவே, இன்று முதல் சரிவிகித உணவைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்.