உணவு சமைக்க Non stick பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

Is it healthy to use non-stick utensils to cook food?
Is it healthy to use non-stick utensils to cook food?
Published on

நான்ஸ்டிக் பாத்திரங்கள் பிரபலமடைய முக்கியக் காரணம் எண்ணெய் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்பதற்காகவும், உணவு அதில் ஒட்டிக்கொள்ளாது என்பதால் பாத்திரத்தை சுத்தம் செய்வது சுலபம் என்பது போன்ற காரணங்களால் நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பிரபலமடைந்தன. இந்தப் பாத்திரத்தில் உணவு சமைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா? இல்லையா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

PTFE என்று சொல்லப்படும் (Poly tetra fluoro ethylene) இந்த பாலிமர் இயற்கையாகவே Hydrophobic natureஐ கொண்டது. அதாவது பாத்திரத்தின் மீது தண்ணீர் ஒட்டாது. Friction Coefficient என்று ஒன்று உள்ளது. இதனால், பாத்திரத்தில் உணவு ஒட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

PTFEஐ தயாரிக்கும்போது சில ரசாயனம் பயன்படுத்துவார்கள். PFOA perfluorooctanoic acid என்பதைப் பயன்படுத்தும்போது இதை நாம் சுவாசித்தால் Thyroid, hormonal imbalance போன்ற பிரச்னைகளை உண்டுபண்ணும் என்று சொல்லப்படுகிறது. எனவே, 2010ல் இதை பயன்படுத்துவதைத் தடை செய்துவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கலாமா?
Is it healthy to use non-stick utensils to cook food?

இந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை 500°c க்கு மேலாக சூடுப்படுத்தும்போது அந்தப் பாத்திரத்தில் இருந்து toxic fumes வரும். இது நமக்கு ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். பொதுவாக, நாம் சமைக்கும்போது 400 °c தாண்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வாறு நடப்பது அரிதானதேயாகும்.

தற்போது Ceramic coating வந்துவிட்டது. இது சிலிக்கானில் இருந்து தயாரிக்கப்படுகிறது. Teflonஐ ஒப்பிடுகையில் இது மிகவும் பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டிங் இருக்கும் வரை பிரச்னையில்லை. இருப்பினும் Ceramic coating விரைவாக அழிந்துப்போகும் தன்மையைக் கொண்டது. அவ்வாறு அது அழிந்து போய்விட்டால் சில ஆரோக்கிய சம்பந்தமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கூகுளில் இந்த 3 விஷயங்களைத் தேடினால் ஜெயில் தண்டனை நிச்சயம்!
Is it healthy to use non-stick utensils to cook food?

இது போன்ற நான்ஸ்டிக் பொருட்களை வாங்குவதற்கு பதில் இரும்பில் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது நல்லதாகும். நான்ஸ்டிக் பொருட்களை நாம் வாங்கிப் பயன்படுத்த முக்கியக் காரணம் எண்ணெய்யை குறைக்கலாம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில்தான்.

ஆனால், உணவில் கொழுப்புச் சத்து என்பது சிறிது இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது போன்ற எண்ணத்தில் இருந்து வெளிவந்தாலே எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தாமல் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com