இந்த உண்மை தெரிந்தால் நீங்க கடலை மிட்டாய் சாப்பிடவே மாட்டீங்க!

Kadalai mittai
Kadalai mittai
Published on

பல காலமாகவே கடலை மிட்டாய் ஆரோக்கியமான சிற்றுண்டியாக பரவலாக பேசப்படுகிறது. இதனால் பலரும் இதனை விரும்பி உட்கொள்கின்றனர். ஆனால், கடலை மிட்டாயை அதிகமாக உட்கொள்வது உண்மையில் ஆரோக்கியமானதா? வாருங்கள் இந்தப் பதிவில் அது சார்ந்த உண்மையை தெரிந்து கொள்வோம்.‌ 

இதற்காக கடலை மிட்டாயை வேர்க்கடலை மற்றும் கிரீம் பிஸ்கட் உடன் ஒப்பிட்டு பார்ப்போம். ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரை இவை மூன்றுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கலோரிகளை எடுத்துக் கொண்டால், 100 கிராம் கடலை மிட்டாயில் சுமார் 520 கலோரிகள் உள்ளன. அதே அளவு கிரீம் பிஸ்கட்டில் 480 கலோரிகளும், வேர்க்கடலையில் 550 கலோரிகளும் உள்ளன. இந்த ஒப்பீட்டின் மூலம், வேர்க்கடலையில் அதிக கலோரிகள் இருப்பதையும், கிரீம் பிஸ்கட்டில் குறைவான கலோரிகள் இருப்பதையும் அறியலாம். கடலை மிட்டாய் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட அளவில் கலோரிகளைக் கொண்டுள்ளது.

மாவுச்சத்து அளவைப் பொறுத்தவரை, கடலை மிட்டாயில் 45 முதல் 50 கிராம் மாவுச்சத்து உள்ளது. கிரீம் பிஸ்கட்டில் அதிகபட்சமாக 70 கிராம் மாவுச்சத்து உள்ளது. வேர்க்கடலையில் மிகவும் குறைவாக, அதாவது 15 கிராம் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. சர்க்கரையின் அளவைப் பொருத்தவரை, கடலை மிட்டாயில் 40 முதல் 42 கிராம் சர்க்கரை உள்ளது. இது கிரீம் பிஸ்கட்டில் உள்ள சர்க்கரையின் அளவான 38 முதல் 40 கிராமுக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது. ஆனால், வேர்க்கடலையில் இயற்கையாகவே சர்க்கரை அளவு மிகக் குறைவு.

கொழுப்புச்சத்தைப் பொறுத்தவரை, வேர்க்கடலையில் அதிகபட்சமாக 50 கிராம் கொழுப்பு உள்ளது. கடலை மிட்டாயில் 20 கிராம் கொழுப்பும், கிரீம் பிஸ்கட்டில் 15 கிராம் கொழுப்பும் உள்ளன. புரதச்சத்தைப் பொருத்தவரை, வேர்க்கடலையில் 25 கிராம் புரதம் உள்ளது. கடலை மிட்டாயில் 15 கிராம் புரதமும், கிரீம் பிஸ்கட்டில் வெறும் 5 கிராம் புரதமும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்த உண்மை தெரிந்தால் நீங்க மவுத்வாஷ் பயன்படுத்தவே மாட்டீங்க!
Kadalai mittai

இந்த ஒப்பீட்டின் மூலம் சில முக்கிய உண்மைகள் வெளிப்படுகின்றன. கடலை மிட்டாயில் கிரீம் பிஸ்கட்டைப் போலவே அதிக அளவு சர்க்கரை உள்ளது. எனவே, கடலை மிட்டாயை ஆரோக்கியமான உணவு என்று நினைத்து அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் கடலை மிட்டாயை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையைப் பொருத்தவரை, அதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு இருந்தாலும், அதிக புரதமும், குறைந்த மாவுச்சத்தும், மிகக் குறைந்த சர்க்கரையும் உள்ளன. எனவே, வேர்க்கடலை மிதமான அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

கடலை மிட்டாயில் வேர்க்கடலையில் உள்ள சத்துக்களுடன் கூடுதலாக வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கப்படுவதால், அதன் ஊட்டச்சத்து அளவில் மாற்றம் ஏற்படுகிறது. வெல்லம் குறைந்த அளவில் சத்துக்களைக் கொண்டிருந்தாலும், அதுவும் ஒரு வகையான சர்க்கரைதான்.

இதையும் படியுங்கள்:
சுவையான கடலை உருண்டை - எள் உருண்டை செய்யலாமா?
Kadalai mittai

எனவே, கடலை மிட்டாயை முற்றிலும் ஆரோக்கியமற்ற உணவு என்று கூற முடியாது. ஆனால், அதனை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மிதமான அளவில் எப்போதாவது கடலை மிட்டாய் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com