Muesli ஆரோக்கியமான உணவா? இது உடல் எடையைக் குறைக்க உதவுமா?

Muesli
Muesli
Published on

ற்போது உள்ள காலக்கட்டத்தில் காலை உணவு என்பது இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். காலை உணவு ஆரோக்கியமானதாகவும், லைட்டாகவும் எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.  இவர்கள் சாப்பிடக்கூடிய உணவு தான் ம்யூஸ்லியாகும். மைதாவை விட இதில் அதிகமான மாவுச்சத்து இருக்கிறது என்பது தெரியுமா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ம்யூஸ்லி உணவு Switzerland இன் உணவு வகையாகும். இது சுமார் நூறு வருடங்களாக புழக்கத்தில் உள்ள உணவாகும். இந்த உணவு மருத்துவரான Maximilian Bircher benner என்பவர் காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதற்காக கண்டுப்பிடித்ததாகும்.

ம்யூஸ்லி ஓட்ஸ், நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், வாழைப்பழம், பால் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதுவே பிறகு பிரபலமாகி உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் High protein Muesli, low sugar Muesli என்று பலவகைகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Muesli 100 கிராமில் 385 கலோரிகள் இருக்கிறது. மாவுச்சத்து 80 கிராம் இருக்கிறது. சர்க்கரை 20 கிராம், கொழுப்பு 5 கிராம், புரதம் 8 கிராம் உள்ளது. இது ஒரு பிரதானமான மாவுச்சத்து நிறைந்த உணவாகும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை அளவை குறைக்க நினைப்பவர்கள் இதில் 80 கிராம் மாவுச்சத்து உள்ளது என்பதை கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகும். சாதாரண அரிசியில் 100 கிராமில் 75 கிராம் மாவுச்சத்து உள்ளது. கோதுமை மாவில் 72 கிராம் மாவுச்சத்து, புரதம் 12 கிராம் உள்ளது. மைதாவில் 77 கிராம் மாவுச்சத்தும் 12 கிராம் புரதமும் உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கோ அல்லது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கோ இந்த Muesli உகந்த உணவு என்று சொல்ல முடியாது.

இதற்கு பதில் தனியாக நாமே ஓட்ஸ், நட்ஸ், பால், பழங்கள் போன்றவற்றை சேர்த்து செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. கடையில் வாங்கக்கூடிய muesli இல் அதிகமாக மாவுச்சத்து இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும். காலையில் வேலைக்கு செல்பவர்களும், இதை லைட்டான ஆரோக்கியமான உணவாக கருதி எடுத்துக் கொள்பவர்களும் இந்த விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது சிறந்ததாகும்.  

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்!
Muesli

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com