
உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல்நிலையை மேம்படுத்த வழிவகை செய்யும் குடல்களை சுத்தம் செய்வதற்கும் வெல்லம் உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் துணை புரியும். வெல்லத்திற்கு செரிமான நொதிகளை தூண்டும் சக்தி இருக்கிறது அதனால் உணவு எளிதில் செரிமானமாகும். நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டால் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும் அதன் மூலம் உடலும் அசௌகரியத்தை எதிர்கொள்ளும் அந்த சமயத்தில் சிறிதளவு வெல்லம் சாப்பிடலாம் அது செரிமானத்தை துரிதப்படுத்தும் மலச்சிக்கலையும் தடுக்கும்.
வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்துள்ளது அது ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ள வழிவகை செய்யும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வெல்லம் பயன்படுகிறது.
தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும் துணை புரியும். உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருப்பது ரத்த சோகைக்கு காரணமாகிறது வெல்லத்தில் இந்த இரண்டு சத்துக்களும் இருக்கிறது வெல்லத்தில் துத்தநாகம் செலினியம் மற்றும் ஆண்டி ஆக்சிடெணட் இருக்கின்றன அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை.
மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தில் சுமூகமாக எதிர்கொள்ள துணை புரியும். வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெல்லத்தில் கலந்து இருக்கும் சோடியம் மூலக்கூறுகள் பொட்டாசியத்துடன் கலந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம்.
நுரையீரல் மற்றும் குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் சுவாசத்திற்கும் துணை புரிகிறது.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்.
வெல்லம் ஒரு ஆண்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் மீட்சி தன்மை இருப்பதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்து விடும்.
வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக மறதியை தடுக்கலாம்.
பித்தம் வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து தரலாம்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களை கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். அனீமியாவுக்கு இரும்புச்சத்தும் புரத உணவும்சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை என்பது உடல் சோர்வாகும் காரணம் இன்றி படபடப்பாகவும் இருக்கும் சிலருக்கு தலை சுற்றலும் இருக்கும் அந்த நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
வெல்லம் ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு மற்றும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த வெல்லம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால் தொற்றுகள் சளி மற்றும் இருமல் போன்றவற்றுக்கு உடலை எதிர்க்கும் திறனை அதிகரிக்கிறது.
வெல்லம் ரத்தத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது. இது முகபருக்கள் மற்றும் பிற தோல்தொற்றுகளை தடுக்கவும் உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும்வலி மற்றும் தசை பிடிப்புகளை தீர்ப்பதில் வெல்லம் சிறப்பாக செயல்படுகிறது. இதை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் சூடான பாலில் கொஞ்சம் வெல்லத்தைச் சேர்த்து மாதவிடாய் காலத்தில் தினசரி இரண்டு முறை குடித்து வந்தால் பலன் உடனடியாக தெரியும்.
சளி மற்றும் காய்ச்சலுக்கு வெல்லம் சிறந்த நிவாரணியாக உள்ளது ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தை நன்றாக பொடித்துக் கொண்டு பின்பு அவற்றோடு கொஞ்சம் இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு நன்றாக குளிர்ந்ததும் அதை பருகினால் சளித்தொல்லையிலிருந்து தீர்வு கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)