வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் லிச்சி பழம்!

Litchee fruit solves stomach related problems
Litchee fruit solves stomach related problemshttps://tamil.boldsky.com

மிழில் விழுதி, விளத்தி ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் லிச்சி பழம் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் முட்டை வடிவில் காணப்படும். இதன் மேல் தோலை நீக்கினால், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம் காணப்படும். இந்தப் பழத்தில் புரோட்டீன், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோபுளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இளஞ்சிவப்பு நிறம் தவிர, இன்னும் சில நிறங்களிலும் இந்தப் பழம் கிடைக்கிறது.

தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகமாகும். இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சி விதையில் உள்ள உட்பொருட்கள் இதயத் தமனிகளைப் பாதுகாத்து கார்டியோ வாஸ்குலர் நோய்களைத் தீர்க்க உதவி செய்கிறது. இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

லிச்சி பழத்தை அதிகளவு உட்கொள்வதனால் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். ஏனெனில், இந்த லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளன. இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோரா நீங்க? ப்ளீஸ், இந்த செட்டிங்ஸ் மாத்தி கொடுங்க! 
Litchee fruit solves stomach related problems

லிச்சி பழத்தின் விதைகள் நம்முடைய தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த விதையிலுள்ள மூலக்கூறுகளில் உள்ள பாலிபினைல்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்கிறது. இந்தப் பழத்தை உட்கொள்வதனால், செரிமானம் சீராக நடைபெறும். குறிப்பாக கோடைக் காலங்களில் ஏற்படும் வயிற்றுக் கோளாறு பிரச்னைகள், இந்த லிச்சி பழத்தை உட்கொண்டு வந்தால், சரியாகி விடும்.

இந்தப் பழத்தில் உள்ள பைட்டோ - கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை பிரச்னை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், லிச்சிப் பழத்தில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com