மாக்ஸ் ஹோடக் திட்டம்: மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்!

(max-hodak-brain-computer-interface) மூளையில் நேரடி சென்ஸர் பொருத்தும் மாக்ஸ் ஹோடக் திட்டம்: பார்வை இழப்பு முதல் முதுகெலும்பு முறிவு சிகிச்சை வரை புரட்சி ஏற்படுத்தும் புதிய BCI தொழில்நுட்பம்
max-hodak-brain-computer-interface
max-hodak-brain-computer-interfacecredit AI Image
Updated on

மாக்ஸ் ஹோடக் (Max Hodak) என்ற பெயரை இதுவரை அறியாதவர்கள், இனி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹோடக், ஒரு உயிரியல் மருத்துவப் பொறியாளர் (Biomedical Engineer) ஆவார். எலான் மஸ்க் நிறுவிய ‘நியூராலிங்க்’ நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு முக்கிய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். பின்னர், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் ‘ஸயின்ஸ் கார்பொரேஷன்’ என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

இவர் கண்டுபிடித்த ‘பிரைமா அமைப்பு’ (PRIMA SYSTEM) பார்வை இழந்தவர்களுக்குப் பார்வையைத் தர உதவியது. இந்த அமைப்பில் ‘ப்ரெய்ன்-கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ்’ (BCI – Brain Computer Interface) என்னும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

அடுத்த கட்டப் பாய்ச்சல்: மூளையில் சென்ஸர்

இப்போது அடுத்தபடியாக ஒரு பெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியிருக்கிறார் ஹோடக். இந்தத் திட்டத்தின்படி, மனித மூளையில் ஒரு சென்ஸர் (max-hodak-brain-computer-interface) பொருத்தப்படும். இதற்காக ஹோடக், உலகின் ஆகப் பெரும் மூளையியல் நிபுணரான டாக்டர் முரட் குனல் என்பவரைத் தனது நிறுவனத்தில் பணியாற்ற அழைத்துள்ளார்.

இந்தக் கம்பெனியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்த உலகம், 23 கோடி டாலர் மதிப்புள்ள இவரது நிறுவனத்தை இப்போது 100 கோடி டாலர் (1 Billion Dollars) மதிப்புள்ள நிறுவனமாக மாற்றிவிட்டது!

ஹோடக்கின் முதன்மை நோக்கம்: கம்ப்யூட்டருக்கும் மனித மூளைக்கும் இடையே ஒரு சிறந்த, நேரடி இணைப்பை ஏற்படுத்துவதே ஆகும்.

நியூராலிங்க் அமைப்பிலிருந்து மாறுபட்ட புதிய தொழில்நுட்பம்

முதுகெலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு எலக்ட்ரானிக் சென்ஸர்களைப் பொருத்தி, மருத்துவ உலகில் புரட்சி செய்தது நியூராலிங்க் நிறுவனம். இந்த அமைப்பை நன்கு ஆய்வு செய்த ஹோடக், 'இந்த முறையில் மின்சக்தி மூலம் எலக்ட்ரோடுகள் பொருத்தப்படுகின்றன; அது தற்காலிகமானது அல்லது குறைபாடுகள் உடையது' என்று உணர்ந்தார்.

ஆகவே, இந்த பழைய சிகிச்சை நடைமுறையை விடுத்து, மூளையில் உள்ள நியூரான்களுடன் நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தார். அதற்காகத்தான் இந்த பிரத்யேக சென்ஸர் கருவி மூளையில் பொருத்தப்படும் புதிய முறை உருவாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மறதியால் அவதியா? மருந்தை விட சிறந்த தீர்வு இதுதான்... பிரிட்டிஷ் டாக்டர் கண்டுபிடித்த ரகசியம்!
max-hodak-brain-computer-interface

இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

  • முதல்படி: முதற்கட்டமாக, உயிருள்ள மனிதர் ஒருவரின் மண்டையோட்டின் மேல் பகுதியில் இந்த சென்ஸர் பொருத்தப்பட இருக்கிறது.

  • முதுகெலும்பு சிகிச்சை: இதன் மூலம் முதுகெலும்பு முறிந்தவர்களுக்கான சிகிச்சை முறை பல மடங்கு துரிதப்படுத்தப்படும்.

  • மூளைக்கட்டி எச்சரிக்கை: மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு இந்த சென்ஸர் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்து, உரிய சிகிச்சையை விரைவாக அளிக்க உதவும்.

  • பார்கின்ஸன் நோய்: கை, கால் நடுக்கத்தை ஏற்படுத்தும் பார்கின்ஸன் வியாதிக்கும் இதுவொரு சிறந்த தீர்வைத் தரும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.

2027-ஆம் ஆண்டில் இதற்கான முதல்கட்ட சோதனைகள் அனைத்தும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், உலக மூளை மருத்துவத் துறையில் ஒரு பிரம்மாண்ட புரட்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மாக்ஸ் ஹோடக்கின் பெயர் இப்போது உலகளாவிய ரீதியில் ஒளிரத் தொடங்கிவிட்டது!

Reference:

Meet Max Hodak: Ex-Neuralink veteran leading $1.5 bn startup to make Brain Computer Interfaces safe - https://www.financialexpress.com/life/technology-meet-max-hodak-ex-neuralink-veteran-leading-1-5-bn-startup-to-make-brain-computer-interfaces-safe-4208118/

logo
Kalki Online
kalkionline.com