ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம்ம உடம்புக்கு ரொம்ப அவசியம்னு நிறைய கேள்விப்பட்டிருப்போம். மூளை நல்லா வேலை செய்யறதுக்கும், சருமம் பளபளப்பா இருக்கறதுக்கும் இது உதவுது. இந்தச் சத்து மீன்ல மட்டும்தான் இருக்கு, இல்லன்னா மீன் எண்ணெய் மாத்திரைதான் சாப்பிடணும்னு நிறைய பேர் நினைப்பாங்க. ஆனா அது உண்மை இல்லை. கடல் உணவு இல்லாத பல தாவரங்கள்லயும் இந்தச் சத்து நிறைஞ்சு இருக்கு.
உடம்போட ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் ஒமேகா 3 முக்கியம். இதைத் தாவரங்கள் மூலமா எப்படிப் பெறலாம்னு பார்ப்போம். சியா விதைகள், ஆளி விதைகள் ரெண்டுமே ஒமேகா 3 சத்து அதிகமா இருக்குற விதைகள். இதை ஓட்ஸ், தயிர், ஸ்மூத்திகள்ல சேர்த்துக்கலாம். ஆளி விதையை முழுசா சாப்பிடாமப் பொடி பண்ணிச் சாப்பிட்டாத்தான் உடம்புல முழுசா சேரும். இது செரிமானத்துக்கும் நல்லது, வயிறு சீக்கிரம் நிறைஞ்ச மாதிரி இருக்கும்.
வால்நட் (அக்ரூட்) பருப்புலையும் ஒமேகா 3 இருக்கு. இதை அப்படியே சாப்பிடலாம், இல்லன்னா வறுத்து சாலட்ல சேர்த்துக்கலாம். இது மூளைக்கு ரொம்ப நல்லது. ஹெம்ப் விதைகள், பரங்கி விதைகள்லையும் இந்தச் சத்து இருக்கு. ஹெம்ப் விதையை ஸ்மூத்திகள்ல சேர்க்கலாம். பரங்கி விதையை ஸ்நாக்ஸா சாப்பிடலாம், குழம்புலயும் போடலாம். பச்சை சோயா பீன்ஸ் மாதிரி சில காய்கறிகள்லயும் ஒமேகா 3 இருக்கு.
மீன்களுக்கே ஒமேகா 3 சத்து ஆல்கேயில இருந்துதான் கிடைக்குது. அந்த ஆல்கேயில இருந்து எடுக்கற எண்ணெய் சப்ளிமென்ட் மாத்திரையாவும் கிடைக்குது. இது சைவம் சாப்பிடறவங்களுக்கு ஒரு நல்ல வழி. கடற்பாசி மற்றும் டோஃபூ கூட ஒமேகா 3 சத்து கொடுக்கிற தாவர உணவுகள் தான். டோஃபூல புரதச்சத்தும் அதிகம்.
எனவே, ஒமேகா 3 சத்துக்காக கட்டாயமா மீன் சாப்பிடணும்னு அவசியம் இல்லை. சியா, ஆளி விதைகள்ல இருந்து வால்நட் போன்ற பல தாவர அடிப்படையிலான உணவுகள்ல இந்தச் சத்து இருக்கு. இந்த உணவுகளை நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, ஆரோக்கியமா இருக்கலாம். சைவ உணவு சாப்பிடறவங்களுக்கு இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)