மூக்கு முடிகளை ஏன் அகற்றக்கூடாது? பலர் அறியாத உண்மைகள்!

மூக்கு முடி என்பது உங்கள் உடலின் முதல்நிலை பாதுகாப்பு அரண்.
Nose hair
Nose hairImg credit; AI Image
Published on

முக அழகைக் கெடுக்கும் தேவையற்ற முடி என்றால், சிலர் புருவத்தை சீர்செய்வார்கள், சிலர் மீசையை ஷேவ் செய்வார்கள், இன்னும் சிலரோ முகத்தில் உள்ள ரோமங்களை நீக்குவார்கள். ஆனால், இந்த வரிசையில் பெரும்பாலானவர்கள் கவனிக்காத, ஆனால் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் மூக்கு முடி (Nose hair).

பலர், மூக்கு முடியை அசிங்கமாக கருதி, அதை வெட்டுவது அல்லது அகற்றுவது என ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தச் சிறிய செயல், நம் உடலுக்குள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலானவர்கள் மூக்கு முடி முக அழகைக் கெடுக்கும் ஒரு தேவையற்ற விஷயமாகவே பார்க்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், மூக்கு முடி என்பது உங்கள் உடலின் முதல்நிலை பாதுகாப்பு அரண். ஒரு கட்டடத்திற்கு எப்படி பாதுகாப்புச் சுவர் முக்கியமோ, அதேபோல் உங்கள் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்திற்கு மூக்கு முடிதான் பாதுகாப்புச் சுவர்.

இது எப்படி வேலை செய்கிறது?

நீங்கள் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான கிருமிகள், தூசுகள், மகரந்தத் துகள்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒவ்வாமை காரணிகள் கலந்துள்ளன. இவை நேரடியாக நுரையீரலுக்குச் சென்றால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை வலி போன்ற பல நோய்கள் வரும். இந்த ஆபத்தான துகள்களை நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்கும் ஒரு வடிகட்டியாக மூக்கு முடி செயல்படுகிறது.

ஆம்! சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் முதல் இடம் உங்கள் மூக்கு முடிகள்தான்!

மூக்கு முடியை அகற்றுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?

  • நீங்கள் மூக்கு முடியை வெட்டும்போதோ அல்லது பிடுங்கும்போதோ, மூக்கின் உட்புறச் சவ்வில் (Mucus Membrane) சிறிய கீறல்கள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சிறிய காயங்கள் வழியாக, காற்றில் உள்ள பாக்டீரியாக்கள் எளிதாக உடலுக்குள் நுழைந்து, தீவிர நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். இது மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, மூக்கு புண் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும்.

  • நம் முகத்தில், மூக்கு மற்றும் வாய் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு பகுதி மரண முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஏற்படும் எந்த நோய்த்தொற்றும் நேரடியாக மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டது. மூக்கு முடியை அகற்றும்போது ஏற்படும் நோய்த்தொற்றுகள், சில சமயங்களில் மூளைக்குச் சென்று, மிக ஆபத்தான மூளைக்காய்ச்சல், மூளை கட்டி போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், இது மிகவும் அரிது.

  • மூக்கு முடிகள் மகரந்தம், தூசு மற்றும் பிற அலர்ஜி காரணிகளை உள்ளே விடாமல் தடுக்கும் ஒரு தடுப்புச் சுவராகும். இந்த முடிகளை அகற்றும் போது, அலர்ஜியை ஏற்படுத்தும் துகள்கள் எளிதாக நுரையீரலை அடைந்து, அலர்ஜி, சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தலாம்.

  • மூக்கு முடிகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன. இவை இல்லாமல் போனால், மூக்கின் உட்புறம் வறண்டு போய், மூக்கடைப்பு, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த நிலை மோசமடையலாம்.

இதையும் படியுங்கள்:
பயோஹேக்கிங்: உடலின் சக்தியை 10 மடங்கு அதிகரிக்க நவீன வழி!
Nose hair

மூக்கு முடியை எப்படிப் பராமரிப்பது?

மூக்கு முடியை முழுமையாக அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அதைச் சீர்செய்யும் முறைகளைப் பின்பற்றலாம்.

  • மூக்கு முடி வெட்டுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'நோஸ் ட்ரிம்மர்கள்' சந்தையில் கிடைக்கின்றன. இவை பாதுகாப்பான முறையில், வெளிப்புறமாகத் தெரியும் முடிகளை மட்டும் வெட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது உங்கள் சருமத்தில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை எடுக்குறீங்களா? ஆபத்தில் முடியலாம் ஜாக்கிரதை!
Nose hair
  • சாதாரணக் கத்தரிக்கோலை வைத்து மூக்கு முடியை வெட்டுவதைத் தவிருங்கள். இதனால் மூக்கின் உள்ளே காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • மூக்கு முடியைப் பிடுங்குவது அல்லது வேக்ஸிங் செய்வது மிக ஆபத்தானதாகும். இது வேர்ப்பகுதியைப் பாதித்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com