'எதுவும் செய்யாமல் இருப்பது கூட உடல் நலனுக்கு நல்ல மருந்து' - சொன்னது யார்? இன்னும் யார் யார் என்னென்ன சொன்னார்கள்?

நமது உணவு உண்ணும் முறையை சரி செய்து கொண்டாலே நோய் வரும் முன் காக்கலாம்..
eat on time
eat on time
Published on

மருத்துவ தந்தை ஹிப்போக்ரேட்ஸ்

நமது உடலில் உள்ள இயற்கை சக்திகளே நோயை உண்மையாக குணப்படுத்தும் விஷயங்கள். எதுவும் செய்யாமல் இருப்பது கூட ஒரு சில நேரங்களில் உடல் நலனுக்கு ஒரு நல்ல மருந்து . நடை பயிற்சியே மனிதனுக்கான சிறந்த மருந்து. நம் உணவு நமது மருந்தாக இருக்க வேண்டும், நம் மருந்து நமது உணவாக இருக்க வேண்டும். இரண்டு விஷயங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உதவி செய்யுங்கள் அல்லது குறைந்தபட்சம் எவ்விதமான தீமையையும் செய்யாதீர்கள்.

அக்குபஞ்சர் மருத்துவத் தந்தை உவோபிங்

உணவினால் நோயில்லை, உணவை உண்ணும் முறையில் தான் நோய் வருகிறது. நமது உணவு உண்ணும் முறையை சரி செய்து கொண்டாலே நோய் வரும் முன் காக்கலாம்.

பசிக்கும் போது மட்டும் உணவு உண்ண வேண்டும். உண்ணும் உணவை நிதானமாகவும், பிற வேலைகளில் கவனம் செலுத்தாமலும் சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் போது பற்கள் தங்களுடைய வேலையை முழுமையாகச் செய்யும். வயிறு நிறைந்த உணர்வு வந்தவுடன் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். இரவு உணவு குறைவாகவும், மிக எளிதாக ஜீரணமாகும் உணவாகவும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடல் துர்நாற்றம்: ஒருவரின் இயற்கையான வாசனையை உணவுமுறை பாதிக்கிறதா?
eat on time

உலக சுகாதார நிறுவனம் செய்தி குறிப்பு

ஆரோக்கியம் என்பது நோய்கள் இல்லாத நிலை மட்டும் இல்லை! தனக்கு நோய் எதுவும் இல்லை என்று மனதும் பரிபூரணமாக நம்பும் நிலைதான்.

காஷ்யப் சம்ஹிதை

சரியாகவும் முறையாகவும் உட்கொள்ளப்படும் உணவு, உடலுக்கு பொலிவினை கூட்டுகிறது, பலத்தை தருகிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது, மனம் ஆனந்தமாகிறது, நீண்ட ஆயுளையும் தருகிறது.

ஆயுர்வேத மருத்துவ மேதை வாரியர்

மனிதர்களைத் தாக்கும் நோய்களில் 85 சதவீதம் மருத்துவர் உதவியின்றியே குணமாகக்கூடியது. 15 சதவீத நோய்களுக்கு மட்டுமே மருத்துவரின் சிகிச்சை தேவைப்படுகிறது.

எழுத்தாளர் கரோல் ஹாஃப்மேன்

நல்ல சிரிப்பும், நீண்ட உறக்கமும் எதற்கும் சிறந்த மருந்துகள்.

வில்லியம் ஓஸ்லர்

நல்ல மருத்துவர் நோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்; சிறந்த மருத்துவர் நோய் உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான வாழ்வுக்கு தவிர்க்க வேண்டிய 5 பிரபலமான இந்திய சிற்றுண்டிகள்!
eat on time

சரபேந்திரர் வைத்திய முறை

குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள், இளைத்தவர்கள், காயம் பட்டவர்கள், நோயில் அடிபட்டவர்கள், வழக்கமாக போதைப் பொருட்களை உபயோகித்து வருகிறவர்கள், வண்டி, குதிரை, நடை முதலியவற்றால் களைத்தவர்கள், பட்டினி கிடப்பவர்கள், கொழுப்பு, வியர்வை, கபம், ரசம், இரத்தம் இவை இருக்க வேண்டிய அளவுக்கு குறைவாக உள்ளவர்கள், அஜீரணமுள்ளவர்கள் ஆகிய இவர்கள் பகலில் முக்கால் மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் வரை தூங்கலாம். அதிக தாகம் எனும் நோய், வயிற்று வலி, வீக்கம், அஜீரணம், வயிற்றுப்போக்கு இந்த நோயுள்ளவர்கள் பகலில் தூங்கலாம்.

விதுரநீதி

உடல் நலத்தை விரும்புகிறவன் உண்ண முடிவதும், உண்ணத்தக்கதுமான, உண்ட பின் செரிப்பதுமான உணவையே உண்ண வேண்டும்.

லாங்பெல்லோ

மகிழ்ச்சி, அளவான உணவு, போதுமான அளவு ஓய்வு ஆகியவை இருந்தால் நாம் மருத்துவரை அணுக வேண்டியதில்லை.

வால்டேர்

மருத்துவக் கலை என்பது நோயாளியை மகிழ்விப்பதாகும்; அதே நேரத்தில் இயற்கை நோயைக் குணப்படுத்துகிறது.

ஹி வாங் சூ

அமைதியாய் இரு, தூய்மையாய் இரு, உடம்பை அலட்டிக் கொள்ளாதே, உன் உயிர்ச் சாரத்தைச் சீர் குலைக்காதே. நீ என்றென்றும் ஆரோக்கியமாய் வாழ்வாய்.

நார்மன்

வயதோ, சோகமோ இரத்தத்தை உறிஞ்சுவதை விட பொறுமையின்மை அதிக இரத்தத்தை உறிஞ்சி விடும்.

லுவாண்டா கிராசெட்

வேறு எதையும் செய்வதை கற்பனை செய்ய முடியாதவர்களுக்கு மட்டுமே மருத்துவம்.

இதையும் படியுங்கள்:
தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறை பற்றித் தெரியுமா?
eat on time

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com