எண்ணெய் இல்லா சமையல்: ஏர் ஃப்ரையரில் நீங்கள் அறிய வேண்டியவை!

Air fryer foods
Air fryer foods
Published on

Air fryer என்பது மிகக் குறைந்த அளவு எண்ணெய் அல்லது எண்ணெயே இல்லாமல் உணவுகளைப் பொரித்து எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நவீன சமையலறை சாதனமாகும். சொல்லப்போனால் இது ஒரு கன்வெக்‌ஷன் அடுப்பு போலச் செயல்படுகிறது.

Air fryerல் சமையல் செய்வது நல்லதா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சிலர் இதில் சமைத்தால் கேன்சர் வரும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் இது ஆரோக்கியமானது தான் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்பதை விளக்கமாக இந்தப் பதிவில் காண்போம்.

முதலில் Air fryer எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம். Air fryer ல் ஹீட்டர் ஒன்று இருக்கும். கரண்ட் வந்ததும் அந்த ஹீட்டர் சூடாக ஆரம்பிக்கும். அதன் மேல்புறமாக ஃபேன் ஒன்று இருக்கும்.

உங்க வீட்டில் Air fryer இல்லையா? உடனே வாங்க...

அது வெளிப்புறமாக காற்றை உறிஞ்சி ஹீட்டர் வழியாக கொடுக்கும். அது வெப்பமான காற்றாக வரும். அது உணவுப்பொருட்கள் மீது படும்போது அது சமைக்கப்படுகிறது. இந்தக் காற்றின் வேகம் காரணமாக, உணவு விரைவாகவும், சமமாகவும் சமைக்கப்படுகிறது.

எந்த உணவுப்பொருளையும் 120 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சமைக்கும் போது  அதில் Acrylamide என்னும் கெமிக்கல் காம்பவுண்ட் உருவாகிறது. இது ஸ்டார்ச் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு போன்றவற்றில் தான் அதிகம் உருவாகிறது. இந்த Acrylamide க்கு கேன்சர் உண்டாக்கக்கூடியதன்மை உண்டு என்று சொல்லப்படுகிறது. Air fry, oil fry, oven fry ஆகிய மூன்றில் Air fryல் தான் அதிகமாக Acrylamide உருவாவதாக சொல்கிறார்கள். Air fryer ல் 12.19mg/Kg அளவு Acrylamide உருவாகிறது.

Air fryerஐ பயன்படுத்துவதன் முக்கியமான காரணம் கலோரிகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவே. இதை பயன்படுத்தும் போது எண்ணெய்யில் சமைப்பதை விட கலோரிகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. ஆழமான பொரித்தலுடன் ஒப்பிடுகையில், இது 70% முதல் 80% வரை எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைக்கிறது. இதனால் கலோரி மற்றும் கொழுப்புச் சத்து குறைகிறது.

இதையும் படியுங்கள்:
மாத்திரை வேண்டாம்! கெட்ட கொழுப்பை கரைக்க 7 மேஜிக் வழிகள்!
Air fryer foods

கடைசியாக கேன்சர் போன்ற பிரச்னைகளுக்காக Air fryer வாங்குவதற்கு பயந்தால், இதனால் மட்டுமே கேன்சர் பிரச்னைகள் வரப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இது இந்திய சமையல் முறைக்கு சரிவராது என்பதையும் புரிந்துக் கொள்வது நல்லது.

உங்க வீட்டில் Air fryer இல்லையா? உடனே வாங்க...

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com