OMAD (One Meal A Day) என்னும் 'டயட்' பிளான் - இது நல்லதா? அவசியமா? சும்மா ஃபாஷனா?

OMAD diet
OMAD diet
Published on

நம்மில் பலர், தனது வயது மற்றும் உயரம் போன்றவற்றை அளவு கோலாக வைத்து அதற்குப் பொருந்துமாறு உடல் எடையையும் சமநிலையில் வைத்துப் பராமரித்து 'சிக்' கென்று தோற்றமளிக்க விரும்புகின்றனர். எடை குறைய அவர்கள் பின்பற்றி வரும் வேகன், வெஜிடேரியன், செவன் டே சேலஞ் போன்ற 'டயட்' பிளான்களில் ஒன்றுதான் OMAD பிளான்.

இதைப் பின்பற்ற விரும்புபவர்கள், உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க, ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட முறையான முழு சாப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இடைப்பட்ட நேரத்தில் ஒரு முறை ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ்களை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

உணவைத் தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு தனி மனிதரின் தேவைக்கேற்ப அமையும். OMAD முறையைப் பின்பற்றும்போது உட்கொள்ளும் உணவுகளின் மொத்த கலோரி அளவு குறைவாக இருப்பதால் உடல் எடையில் வேகமாக சரிவு உண்டாகும். அதிகப்படியாக இருக்கும் கொழுப்பின் அளவும் குறையும். தேர்ந்தெடுக்கப்படும் உணவுகளின் மூலம் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு உயராமல் பார்த்துக்கொள்ளலாம். இதனால் உடலின் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.

OMAD முறையில் காலை உணவு தவிர்க்கப்படுவதால், வயிற்றில் ஆகாரமின்றி விரதமிருப்பதுபோல் பட்டினி கிடக்க நேரும். அப்போது நரம்பு மண்டலம், நியூரோ டீஜெனரேஷன் என்னும் செயல்பாட்டை நிதானமாக நடைபெறச் செய்யும். இது வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் உதவியாகும்.

எடை குறைப்பில் அதிக கவனம் செலுத்த விரும்புபவர்களுக்கு OMAD பிளான் நல்ல முறையில் உதவி புரியும். இருந்தாலும் இதன் மூலம் உண்டாகும் பக்க விளைவுகள் அதிகம் எனலாம். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. விரைவான எடைக் குறைப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 'டயட்' பீரியட் முடிந்து, வழக்கமான உணவு முறைக்குத் திரும்பும்போது, மீண்டும் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

2. 'டயட்' பீரியடில், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் அதிக உணவை உட்கொள்வது, வயிறு மற்றும் செரிமான அமைப்பில் தேவையற்ற அழுத்தத்தை உண்டு பண்ணி உடல் கடினமாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். இதயமும் குடலுக்கு அதிக இரத்தத்தை அனுப்ப கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடலின் இரத்த அழுத்தம் உயரும் அபாயம் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
ஆபத்தில் முடியும் 5 வகை 'டயட் பிளான்'கள்! ஏன் இந்த விஷப்பரீட்சை?
OMAD diet

3. OMAD முறையில் காலை உணவு தவிர்க்கப்படுவதால், உட்கொள்ளும் கலோரி அளவு மிகவும் குறைந்துவிடும். அதனால் உடல் ஒரு மாதிரியான பாதுகாப்பற்ற உணர்வைப் பெறும். அப்போது உடலின் வளர்சிதை மாற்றம் குறைய ஆரம்பிக்கும். அது உடலுக்கு நீண்ட கால ஆரோக்கியக் கேட்டை உண்டுபண்ணும். டைப் 2 வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது ஏற்றதாகாது. அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்து 'ஹைப்போ க்ளைசெமியா' என்ற நிலை உருவாக வாய்ப்புண்டு.

4. மேலும் இந்த வகை உணவைப் பின் பற்றும்போது குமட்டல், மந்த நிலை, சோர்வு மற்றும் மலச் சிக்கல் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும் சாத்தியக் கூறுகள் அதிகம். உட்கொள்ளும் உணவின் அளவு குறையும்போது உற்பத்தியாகும் ஆற்றலின் அளவும் குறைந்து, உடல் பலவீனமாகவும் நடுக்கமாகவும் உணர வைக்கும்.

5. குழந்தைகள், முதியோர், வளரிளம் பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள், உண்ணுதல் கோளாறு (Eating disorder) உள்ளவர்கள் OMAD டயட் முறையை பின்பற்றவே கூடாது.

இதையும் படியுங்கள்:
'கிளிமஞ்சாரோ டயட்' என்றால் என்ன தெரியுமா?
OMAD diet

மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னே எந்த வகையான டயட் பிளானையும் பின் பற்ற முடிவெடுப்பது ஆரோக்கியமானது

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com