ஜிம் செல்வோரே கவனிங்க! உடற்பயிற்சிக்கு பின் இந்த தவற்றை செய்யாதீங்க... உழைப்பு வீண்!

உடற்பயிற்சிக்கு பின் வயிறு கபகபவென்று பசிக்கிறதா? உங்கள் கடின உழைப்பு வீணாகாமல், தசை வலிமை பெறவும் எடையை குறைக்கவும் சாப்பிட வேண்டிய சரியான உணவுகளின் பட்டியல் இதோ!
Post workout diet
Post workout dietImage credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும், உடல் ஆரோக்கியத்திற்காகவும், எடையைக் குறைப்பதற்காகவும் என ஏதாவது ஒரு நோக்கத்தில் நாம் உடற்பயிற்சிகளை மேற்கொள்வோம். உடற்பயிற்சிகள் முடித்த கையுடன் வயிறு கபகபவென்று பசி எடுக்கும். இந்த சமயத்தில் நம்முடைய இலக்கு என்ன என்பதை மறந்து கொழுப்புச்சத்து நிறைந்த, இஷ்டப்பட்ட உணவுகளை சாப்பிட்டோம் என்றால் நாம் செய்த மொத்த பயிற்சியும் வீணாகி விடும்.

எந்த நோக்கத்திற்காக பயிற்சி செய்தோமோ அதன் பலன் கிடைக்காமல் போய்விடும். எனவே உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கவும், தசைகள் வலிமையடையவும், ஆற்றல் பெருகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு புரதச்சத்து நிறைந்ததாக, கொழுப்புகளை எரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

1) உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம்: 

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டுமென்றால் அதிகாலையில் எழுந்து கொள்பவர்கள் காலையிலும், இரவில் விழித்திருப்பவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என்று வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

2) உடற்பயிற்சி சிற்றுண்டி:

உடற்பயிற்சி சிற்றுண்டி என்பது உடற்பயிற்சிக்கு முன்பு ஆற்றலை உடனடியாக அதிகரிக்கவும், சோர்வைத் தடுக்கவும் உதவும் சில எளிய உணவுகள். 

வாழைப்பழம் - உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த பழமாகும். 

ஓட்ஸ் - உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் நிலைத்திருக்கும் ஆற்றலைத் தரக்கூடியது. 

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter) - இதனை ஒரு சிறிய துண்டு ஆப்பிளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பீனட் பட்டர் டோஸ்ட் - ஒரு துண்டு முழு தானிய பிரெட்டில் ஒரு ஸ்பூன் வேர்கடலை வெண்ணெய் தடவி சாப்பிடலாம்.

மோர் அல்லது இளநீர் - உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைத் தரக்கூடியது.

இதையும் படியுங்கள்:
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க ஒர்க்அவுட் செய்பவரா நீங்க? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
Post workout diet

3) உடற்பயிற்சிக்குப் பின்பு 30 நிமிடங்களுக்குள் சாப்பிட உடற்பயிற்சியின் பொழுது இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும் சில உணவுகள் (Workout foods).

முட்டை - வேக வைத்த முட்டை தசை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. 

கிரேக்க தயிர் (Greek Yoghurt) - புரதச்சத்து நிறைந்தது. இதனை உடற்பயிற்சிக்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். 

பாதாம் மற்றும் உலர் திராட்சை - உடனடி தசை மீட்புக்கு உதவக்கூடியது.

பனீர் அல்லது டோஃபு - சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச்சிறந்த புரதம் நிறைந்த உணவு. 

முளை கட்டிய பயறு அல்லது சுண்டல் -  பாசிப்பருப்பு, கொண்டை கடலை போன்றவற்றில் அதிகப்படியான தாவரப் புரதம் உள்ளது. இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

4) கவனிக்க வேண்டியவை: 

முக்கியமாக உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், பயிற்சியின் பொழுதும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். 

அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com