‘பொதி’ சோற்றிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

‘பொதி’ சோற்றிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Published on

வேலைக்கோ மற்ற வெளியிடங்களுக்கோ செல்லும் கேரள மாநில மக்கள் தங்கள் மதிய உணவை வாழை இலையில் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்வது வழக்கம். மதியம் அந்த பாக்கெட்டைப் பிரிக்கும்போது அதிலுள்ள உணவில் தனித்துவமான மணமும் சுவையும் கூடி, பசி உணர்வை முழுமையாக திருப்தி அடையச் செய்யும். மேலும், எவ்வளவு நேரம் ஆனாலும் உணவின் ஃபிரஷ்னஸ் மாறாது. இதன் காரணமாகவே கேரள மக்கள் ஒவ்வொருவரின் வீட்டின் கொல்லைப்புறத்திலும் வாழை மரங்கள் வளர்ந்து வருவதைக் காணலாம். தற்போதைய சூழலில் வாழை இலைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டபின்  இலைச் சாப்பாட்டை விரும்புபவர்களின் ஏக்கம் தீர்க்க சில ரெஸ்டாரெண்ட்களில் வாழை இலையில் உணவு பரிமாறுவதைக் காண முடிகிறது. வாழை இலையில் உணவு உண்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் நம் உடலுக்குக் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. வாழை இலையின் மீது மெழுகு போன்றதொரு மெல்லிய கோட்டிங் (Coating) உண்டு. இது இலையில் வைக்கப்படும் சூடான உணவுக்கு ஒரு தனித்துவமான மணம் கொடுக்கும். மேலும் கறி வகைகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் சுவையூட்டும் சாறுகளை இலை உறிஞ்சி கொள்ளாமலும் இந்த கோட்டிங் பாதுகாக்கும்.

2. வாழை இலையில் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாலிபினால், குளோரஃபில், லிக்னின் (Lignin), ஹெமிசெல்லுலோஸ் (himicellulose), கால்சியம், புரோட்டீன், வைட்டமின் A, கரோட்டின் மற்றும் சிட்ரிக் ஆசிட் போன்ற பல கூட்டுப் பொருள்கள் நிறைந்துள்ளன.

3. க்ரீன் டீயில் காணப்படும் எபிகலோகேட்டசின்கல்லாடே (EGCG) என்ற கூட்டுப்பொருளும் வாழை இலையில் உள்ளது. இது ஒரு இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இதன் உதவியால் நம் உடலில் உள்ள தீங்கு தரும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி நோய்கள் வருவதைத் தடுக்க முடியும். வாழை இலையில் வைக்கப்படும் சூடான உணவுகள் இந்த ஊட்டச் சத்தை (EGCG) தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும். அந்த உணவை நாம் உண்ணும்போது அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலுக்குக் கிடைக்கப் பெற்று நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடையும்.

4. வாழை இலையில் கேன்சரை எதிர்க்கக் கூடிய குணமும் உள்ளது. ஆன்டி கேன்சர் குணம் கொண்ட பாலிபினால் என்ற என்சைம் வாழை இலையில் ஆக்ஸிடேஸ் உண்டுபண்ணி L-Dopa என்ற பொருளை உற்பத்தி செய்யும். இது பார்கின்சன்ஸ் என்ற நோயை குணப்படுத்தவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
திருமண பந்தம் என்றும் மகிழ்ச்சியோடு நிலைத்திருக்க சில ஆலோசனைகள்!
‘பொதி’ சோற்றிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

5. EGCG நீரிழிவு நோயை தடுக்க உதவும். மேலும் இரத்த நாளங்களில் அடைப்பு, ஹார்ட் அட்டாக், இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவது போன்ற தீவிர உடல் நலக் கோளாறுகள் வருவதைத் தடுத்துக் காக்கவும் செய்யும்.

6. வாழை இலை பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் மூலம் உண்டாகும் பல வகை நோய்களையும் தடுக்கக்கூடிய வல்லமை கொண்டது.

7. இதிலுள்ள குளோரஃபில் குடலில் அல்சர் வராமல் தடுக்கவும், சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.

8. வாழை இலையில் உள்ள சில கூட்டுப் பொருட்கள் இரத்தத்தை சுத்திகரிக்கவும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவி புரியும்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாமும் வாழை இலையில் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டு நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com