ராஜபோகம் அரிசி: நீரிழிவு நோயாளிகளின் Best Choice!

ராஜா என்றால் அரசன், போகம் என்றால் இன்பம்... அரசனைப் போன்று அனைத்து இன்பங்களையும் நல்ல உடல் பலத்தையும் தரும் அரிசி ராஜபோகம் அரிசி!
Rice
Rice
Published on
mangayar malar strip

கடைக்கு அரிசி வாங்கச் செல்பவர்கள், தற்போது ராஜபோகம் அரிசி இருக்கிறதா? என்று கேட்டு வாங்குகின்றனர். அதென்ன, ராஜபோகம் அரிசி? அந்த அரிசியில் அப்படி என்ன இருக்கிறது? என்று நமக்குள் கேள்வி எழுவது இயல்புதான். ராஜபோகம் என்பதை ராஜா + போகம் என்று பிரிக்கலாம். ராஜா என்றால் அரசன், போகம் என்றால் இன்பம், அரசனைப் போன்று அனைத்து இன்பங்களையும் தரும் அரிசி என்றும், அரசனைப் போன்று நல்ல உடல் பலத்தைத் தரும் அரிசி என்றும் பொருள் கொள்ளலாம்.

தமிழ் இலக்கியங்களில் காவிரி ஆறு, பொன்னி எனக் குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதிதாக உருவாக்கிய அரிசிக்கு ‘பொன்னி அரிசி’ என்று பெயரிட்டது. பொன்னி அரிசி என்பது இந்தியாவின் தென்பகுதிகளில், குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் முதன்மையாகப் பயிரிடப்படும் ஒரு பிரபலமான அரிசி வகையாக உருவெடுத்திருக்கிறது. பொன்னி அரிசி வெள்ளைப் பொன்னி அரிசி, பழுப்புப் பொன்னி அரிசி என்று இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது.

அரிசி அரைக்கும் போது வெளிப்புற உமி மற்றும் தவிடு அடுக்கு முழுமையாக அகற்றப்பட்டு, அரிசி முழுமையான வெள்ளை நிறத்தில் சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் வெள்ளைப் பொன்னி அரிசி, பஞ்சு போன்று மென்மையாகவும், சற்று இனிப்புச் சுவையுடனும் இருக்கிறது.

அரிசி அரைக்கும் போது, அதன் வெளிப்புற தவிடு அடுக்கை தக்க வைத்து, அப்படியேப் பழுப்பு நிறத்தில் சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் பழுப்புப் பொன்னி அரிசி சற்று சத்தான சுவை மற்றும் மெல்லும் அமைப்பைக் கொண்டிருக்கிறது.

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தவிடு அடுக்கு இருப்பதால், வெள்ளைப் பொன்னி அரிசியை விட, பழுப்புப் பொன்னி அரிசி அதிகச் சத்துடையதாக இருக்கும். வெள்ளை அரிசி விரைவில் சமைக்கக் கூடியதாக இருக்கிறது. பழுப்பு பொன்னி அரிசி சமைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

பொதுவாக, பொன்னி அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. தசைகள் மற்றும் மூளைக்கான முதன்மை எரிபொருளாகவும், அன்றாட நடவடிக்கைகளுக்கு அவசியமானதாகவும், எளிதில் செரிமானமாகக்கக்கூடிய தாகவும் இருக்கிறது. பொன்னி அரிசி இயற்கையாகவே பசையம் இல்லாதது, இது செலியாக் நோய் அல்லது பசையம் சகிப்புத்தன்மை கொண்ட நபர்களுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.

பழுப்புப் பொன்னி அரிசி, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. இது குளுக்கோஸை மெதுவாக இரத்த ஓட்டத்தில் வெளியிடுகின்றன. இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான கூர்முனையைத் தடுக்கிறது. இது நீரிழிவு நோயாளிகள் அல்லது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிகளுக்கு உதவுகிறது. பழுப்பு பொன்னி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இது அதிகப்படியான உணவைக் குறைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
இலுப்பை பூ சம்பா அரிசி... இதில் இருக்குது அம்புட்டு சக்தி!
Rice

பழுப்பு வகை பொன்னி அரிசி, பி வைட்டமின்கள் (தியாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின்), இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நல்ல உடல் நலத்தைப் பராமரிப்பதிலும், வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதிலும், நரம்புச் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும், ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பழுப்புப் பொன்னி அரிசியில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது, இது இதயத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. பழுப்பு அரிசியில் நார்ச்சத்து இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டு தொல்லையா? இதை செய்தால் போதும்!
Rice

இந்தப் பொன்னி அரிசியில் இருந்துதான் ராஜபோகம் அரிசி தயார் செய்யப்படுகிறது. அதாவது, பொன்னி அரிசியினை இரண்டாண்டுகள் வரை பழையதாக்கும் போது, அந்த அரிசி வைரம் போன்றத் தன்மையைப் பெறுகிறது. மேலும், இரண்டாண்டுகள் கடந்து விடுவதால், அந்த அரிசியிலிருக்கும் சர்க்கரைச் சத்து அடியோடு நீக்கப்பட்டுவிடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தைக்கு வரும் ராஜபோகம் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த, ஆபத்தில்லாத, உணவாக இருக்கிறது.

ராஜபோகம் அரிசிக்கு மெல்லிய, இனிமையான வாசனை உண்டு, இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கிறது. சமைத்த பின்பு மென்மையான மற்றும் பஞ்சு போன்ற அமைப்பைக் கொடுக்கிறது. எனவே, ராஜபோக அரிசியினால் செய்யப்பெற்ற உணவுகளின் சுவையினை அறிந்தவர்கள், அந்த அரிசியையேக் கடைகளில் கேட்டுப் பெறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com