வெறும் 10 நிமிட உப்பு நீர் குளியல்... என்னென்ன மேஜிக் பண்ணுது தெரியுமா?

bath
bath
Published on

உடலை  தூய்மைப்படுத்துவதற்கு தினசரி குளிப்பது அவசியமானது. ஆனால் குளிப்பதற்கு எந்த நீரை பயன்படுத்துக்கின்றோம் என்பதுதான் முக்கியமானது. பெரும்பாலானோர் குளிப்பதற்கு உப்பு நீரைதான் வழக்கமாக பயன்படுத்துவதுண்டு. சிலர் குடிப்பதற்காக பயன்படுத்தும் தண்ணீரை, குளிப்பதற்காகவும் பயன்படுத்துவர். உண்மையில் இதில் எந்த தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்று யோசித்திருக்கீறிர்களா? பல பேருக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு இங்கு தீர்வு காணலாம்.

உப்பு நீரில், குளிப்பது சிறந்த பலனளிக்கும். ஏனெனில், இது நமது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது. என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

உப்பு நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

உப்பு நீரில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. இதனால் நீரில் உள்ள இவற்றின் செறிவு குளிக்கும்போது சருமம் வழியாக உறிஞ்சப்படுகிறது.

மேலும் இந்த தாதுக்கள் வீக்கத்தைக் குறைப்பது முதல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
படுக்கை அறையில் லைட் போட்டு கொண்டு தூங்கறீங்களா? அச்சச்சோ, ஆபத்தாச்சே!
bath

சரும ஆரோக்கியம்:

  • உப்பு நீரில் குளிப்பதன் மூலம், நீரில் உள்ள தாதுக்கள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது. மேலும் உப்பு நீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அரிப்பு, சரும அழற்சி மற்றும் தடிப்பு போன்றவற்றை குணப்படுத்த இது உதவுகிறது.

தசை வலி:

  • நீண்ட நேரம் வேலையில் இருப்பவர்கள் அல்லது ஜிம்மில் கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் உப்பு நீரில் குளிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். ஏனெனில், இது அவர்களுக்கு தசைகளை தளர்த்தவும் பதற்றத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். அதோடு, உப்பு நீரில் உள்ள மெக்னீசியம் தசை பிடிப்பு மற்றும் சருமத்தில் ஏற்படும் புண் போன்றவற்றை சரி செய்கிறது.

  • இந்த உப்பு நீர் குளியல், தசை வலியை அனுபவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

இதையும் படியுங்கள்:
கண்டங்கத்திரி: கழுத்துப் பகுதிக்கு பாதுகாப்பு... சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்! ஆனா... அதிகமா சாப்பிட்டா..?
bath

நச்சுத்தன்மை:

  • உப்பு நீருக்கு நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகள் அதிகம். அதனால், உப்பு நீரில் குளிக்கும்போது, உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. அதோடு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் உணர முடியும்.

  • உப்பு நீரில் உள்ள தாதுக்கள் உடலின் pH அளவை சமநிலைப்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கும்.

இரத்த ஓட்டம்

  • உப்பு நீர் குளியல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி குளிப்பதற்கு உப்பு நீரை பயன்படுத்துபவர்களுக்கு, உடலின் ஆற்றல் அளவு அதிகரிப்பதோடு, உடல் முழுவதுவும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
எலி கடிச்சா சாதாரணமா விடாதீங்க… டாக்டர்கள் சொல்லும் அந்த 10 நிமிட ரகசியம்!
bath

ஆக மொத்தம் உப்பு நீரில் குளிப்பதால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்பதை அறிய முடிகிறது. நீங்கள் குளிப்பதற்கு உப்பு நீரைத்தான் பயன்படுத்துகிறீர்களா என்பதை கமென்டில் பதிவிடுங்கள்...

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com