குடும்பத்தில் ஒரே சோப்பை பயன்படுத்துகிறீர்களா? உஷார்! பரவும் ஆபத்தான கிருமிகள்!

Bathing Soap - சோப்
Bathing Soap - சோப்
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

மனித உடலை சுத்தம் செய்வதில் சோப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கடைகளில் பலவிதமான சோப்புகள் விற்கப்படுகின்றன. இவற்றில் எது நமது சருமத்திற்கு உகந்தது என்று ஒவ்வொருவரும் முதலில் கண்டறிய வேண்டும்.

எண்ணெய் பசை உள்ள சருமம் மற்றும் பருக்கள் உள்ள சருமம் கொண்டவர்கள் கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்தலாம். சோப்பு தயாரிப்பின் ஒரு துணை தயாரிப்பு கிளிசரின் ஆகும், இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எண்ணெய் பசை சருமம் அல்லது முகப்பரு பாதிப்புள்ள இளம் வயதினருக்கு, வேம்பு அல்லது தேயிலை எண்ணெய் அடங்கிய பாக்டீரியா எதிர்ப்பு அல்லது மூலிகை சோப்புகள் பயன் அளிக்கலாம்.

வறண்ட அல்லது சென்சிடிவ் சருமம் உள்ள நடுத்தர வயதினருக்கு சல்பேட்டுகள், நறுமணங்கள் இல்லாத பாடி வாஷ்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். மெல்லியதாகவும், வறண்டதாகவும் காணப்படும் வயதானவர்களின் சருமம் செராமைடுகள் (Ceramides) அல்லது பாதாம் எண்ணெய் கொண்ட ஈரப்பதமூட்டும் பாடி வாஷ்கள் பொருத்தமானதாக இருக்கும்.

குளிர் காலத்தில் மாய்ச்சரைசர் அதிகம் உள்ள சோப்பையும், வெயில் காலத்தில் எலுமிச்சை கலந்த சோப்பையும் பயன் படுத்தலாம். அதிக வாசனை உள்ள சோப்புகள், தரமானவை என்று நினைக்க கூடாது. ராசாயன பொருட்களின் நிறத்தை மறைக்க கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே அதிக மணமும் நிறமும் சேர்க்கப்படுகிறது. எனவே மிதமான வாசனை உள்ள சோப்பே சருமத்திற்கு நல்லது. அதிகப்படியான வாசனை மற்றும் நுரை தரும் சோப்புகள் சருமத்தை வறட்சியடையச் செய்து, சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பயன்படுத்தும் சோப்பை அடிக்கடி மாற்றக்கூடாது. மாற்றினால், புதிய சோப் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தினமும் இரண்டு முறை சோப்பு போட்டு முகம் கழுவினாலே போதும். அடிக்கடி சோப்பு பயன்படுத்தினால், சருமம் வறண்டு போய்விடும்.

சிலருக்கு எந்த சோப்புமே ஒத்துக் கொள்ளாது. இப்படிப்பட்டவர்கள் கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன் பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து பயன்படுத்தலாம், மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளையும் பயன்படுத்தலாம். சருமத்தைப் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் விரும்புபவர்கள், பசும் பாலுடன் கசகசாவை சேர்த்து அரைத்து, குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் கழித்துக் குளித்து வரலாம். இதனால் உடல் பொலிவுபெறும்.

தலைக்கு ஷாம்பு தவிர்த்து அதற்குப் பதிலாக சோப்பை தலைக்கு தேய்த்து குளிக்க கூடாது. அதிலுள்ள அதிகப்படியான PH வேல்யூ தலைமுடியை வறட்சியடையச் செய்து தலைமுடி கொட்ட காரணமாக அமைந்த விடும்.

உடலின் எல்லாப் பகுதிகளிலும் சோப் தேவையில்லை. அக்குள், இடுப்புப் பகுதி, பாதங்கள், கைகள் மற்றும் முகத்திற்கு மட்டும் சோப்பைப் பயன்படுத்தினால் போதுமானது. உடலின் மற்ற பகுதிகளுக்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம். இது அப்பகுதியில் சருமம் மிகவும் வறண்டு போவதைத் தடுக்க உதவும். குறிப்பாக பிறப்புறுப்பில் சோப்பைப் பயன்படுத்துவது எரிச்சலை ஏற்படுத்தி, அங்குள்ள இயற்கையான பாக்டீரியாக்களின் சமநிலையைக் குலைத்து, தொற்றுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். முடிந்தால் அதற்கென உள்ள பிரத்யேக க்ரீம்களை பயன்படுத்தலாம்.

Bathing Soap - சோப்
Bathing Soap - சோப்

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்துவது ஒருவரது உடலில் உள்ள கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் பரவ வழிவகுக்கும். குறிப்பாக தோல் அலர்ஜி மற்றும் பூஞ்சை தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய சோப்பைப் பகிர்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, சுகாதாரத்தைப் பேண ஒவ்வொருவருக்கும் தனித்தனி சோப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்!
Bathing Soap - சோப்

சோப்பின் மேற்பரப்பில் இறந்த செல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒட்டிக்கொள்ள செய்கிறது. இதனை மற்றவர் பயன்படுத்தும்போது, ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு சோப்பு வாயிலாக பரவும் கிருமிகள் சரும தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

டீன் ஏஜ் வயதினர் முதல் முதியவர்கள் (15 - 90 வயது) வரை தங்கள் உடலைச் சுத்தப்படுத்தும் பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது வயதை மட்டும் கருத்தில்கொள்ளாமல்; அவரவரின் சருமத்தின் நிலையைப் புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

குளிக்கும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் காலநிலை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோடைக் காலம், ஈரப்பதமான பருவமழைக் காலங்களில், வியர்வை, ஈரப்பதக் காரணங்களால் தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கின்றன. அந்நேரங்களில் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் அல்லது ஆன்டிசெப்டிக் பாடி வாஷ்கள் பயனுள்ளதாக அமைகின்றன. குளிர்காலத்தில் எண்ணெய்கள் அல்லது ஷியா வெண்ணெய் சேர்க்கப்பட்ட பாடி வாஷ்கள் சரும வறட்சியைத் தடுக்க உதவுகின்றன. கடின நீரை, சோப்புடன் பயன்படுத்தக்கூடாது. இது குளித்தப் பின்பும் சருமத்தில் சோப்பின் எச்சத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் பாடி வாஷ் இந்த பகுதிகளில் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு மாறாக மென்மையான நீருடன் சோப்பை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
காலை எழுந்ததும் வாயில் கசப்பு சுவையா? இந்த 6 காரணங்களை உடனே தெரிஞ்சுக்கோங்க!
Bathing Soap - சோப்

Reference:

logo
Kalki Online
kalkionline.com