சின்ன வேலைக்கே மூச்சு வாங்குதா? நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு அறிகுறிகள்!

சுவாசச் சிக்கல், சளி, நெஞ்சு இறுக்கம் மற்றும் புகை தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு.
COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்
COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்Image Credit: ChatGPT
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

முன்பெல்லாம் வியாபாரிகள் வந்தால் அதன் காரணம் அறியாமல் இருப்போம். தற்போது மருத்துவ உலகின் சாதனை பல தொழில்நுட்பங்களை கொண்டு நோய்களை கண்டறியவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் உயிர்க்கொல்லி நோயாக நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), உருவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புகை மட்டுமே நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கிய காரணம் என அறிகிறோம். 90 சதவிகிதம், புகைப்பதால் மட்டுமே இந்த நோய் வருகிறது. ஆனால் இதனால் வரும் ஆபத்தை நம்மில் பலர் உணர்வதில்லை என பொதுநல மருத்துவர் பிரகதீஷ் MBBS சொல்வதையும் அதற்கான விளக்கங்களையும் பார்ப்போம்.

புகை மட்டுமே இந்த நோய்க்கு முக்கிய காரணமா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். நாள்பட்ட‌ மூச்சுக் குழாய் அடைப்பு நோய் வருவதற்கு புகை மட்டுமே காரணம். வயது வித்தியாசமின்றி இருபாலரையும் தாக்கும். அதிலும் புகைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் எங்கெல்லாம் மக்கள் புகையை அதிகமாக சுவாசிக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த நோய் வளர்ச்சி அடைகிறது.

மூச்சுக் குழாய் என்பது மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். சிகரெட், புகை, புகை கலந்து காற்று, விறகு அடுப்பின் புகையை சுவாசிக்க நேரும்போது மூச்சுக் குழாய் வழியாக நச்சு கலந்த காற்று நுரையீரலை சென்றடைகிறது. நாளடைவில் இது மூச்சுக் குழாயை பாதிக்கிறது. இதன் ஆரம்ப நிலையை நம்மால் கண்டிப்பாக உணர முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் மூச்சுக் குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டு அதன் சாதாரண நிலையை விட கூடுதலாக வீங்க ஆரம்பிக்கும். அப்போது நுரையீரலுக்கு செல்லும் காற்று அடைபடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

ஆஸ்துமாவும், நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோயும் ஒன்றா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்துமாவை குணப்படுத்தி விடலாம் ‌ஆஸ்துமா ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களுக்கு பிரச்சனைகளை கொடுக்காது. ஆனால் நாள்பட்ட மூச்சுக் குழாய் நோயைக் குணப்படுத்தவே முடியாது. நோயை வளர விடாமல் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இந்த நோய் நுரையீரலில் மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்
COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்Image Credit: Gemini

சீரான உடல் இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இங்கு மூச்சுக் குழாய் பாதிக்கப் பட்டு வீங்கி விடுவதால் காற்று செல்வதற்கு தடை ஏற்பட்டு மிகக் குறைந்த அளவில் நுரையீரலில் சென்று சேருகிறது. விளைவு உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கண், இதயம், சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் என அனைத்து உறுப்புகளிலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குளிரில் கை கால்கள் மட்டும் ஐஸ் போல் சில்லென்று ஆவது ஏன்? மறைந்திருக்கும் காரணம்!
COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்

நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோயால் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். போதுமான காற்று கிடைக்காமல் நுரையீரலும் பெரிதாகி விடும்.

இந்த நோயைக் கண்டறிய முடியும். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது மூச்சுப் பிரச்சனை ஏற்படும். சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அடிக்கடி எச்சிலுடன் சளி கலந்து வெளிவரும். நெஞ்சு இறுகியது போல் உணரப்படும். சில நேரங்களில் நெஞ்சுவலி ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்படும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் நாள் பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய் உள்ளதா என சோதித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்த நோயைக் கட்டுப்படுத்த இன்ஹேலர் கிடைக்கிறது. நமது மூச்சுக் குழாயில் உள்ள நச்சுப் பொருளின் அளவை சரியாக அளவிட உதவும். இன்ஹேலர் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம். அதைப் பயன்படுத்தி நோயைவளர விடாமல் தடுத்து ஆரோக்கியத்தை காக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டவுடன் குளித்தால் செரிமானம் கெடுமா? அறிவியல் சொல்லும் விளக்கம்!
COPD - நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்

முற்றிலுமாக புகைப் பழக்கத்தை கை விடுவதும் விறகு அடுப்பை தவிர்ப்பதும் புகை இல்லாத சூழ்நிலையில் இருப்பதுமே இந்த நோய் தீவிரமாகாமல் தடுக்கும். சத்தான சமச்சீரான உணவு, காலையில் மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி என மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.