ஓய்வல்ல, அசைவே மருந்து: மூட்டு வலிக்கு அதுவே தீர்வு!

knee pain
knee pain
Published on

யது வரம்பின்றி மூட்டு வலிகள்(knee pain) வரத் தொடங்கிவிட்டன. மூட்டு வலி வர பல்வேறு காரணங்கள் உண்டு. எலும்பு தேய்மானம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது, நீண்ட நேரம் நடப்பது போன்ற பல காரணங்களால் மூட்டு வலி வருகிறது. சில நேரத்தில் நடக்கும் போது கால் நகர்ந்து கீழே விழும்போது முட்டி லேசாக மடங்கினாலும் வலி தொடரும். பருமனாக உள்ளவர்களுக்கு கூடுதல் எடை காரணமாக மூட்டு வலி வரலாம்.

இந்தியாவில் முழங்கால் அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உடற்பயிற்சி சிறந்த வழியாகும்.

பொதுவாக, முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த முழங்காலை நீட்டி மடக்குதல் போன்ற உடற்பயிற்சி செய்வது நல்லது. இந்தப் பயிற்சியை செய்து வந்தாலே முழங்காலின் வலிமை அதிகரித்து வலி குறையும். சேரில் (chair) அமர்ந்து காலை உயர்த்தி மடக்கி செய்யும் பயிற்சி செய்யலாம்.

முழங்கால் பிரச்னை உள்ளவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதையும் சரிவான பாதைகளில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். முழங்கால்களை வளைக்கும் பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களை செய்யக்கூடாது.

வலி இருக்கும்போது எந்தப் பயிற்சியும் வேண்டாம். அது ஆபத்தை அதிகரித்துவிடும்.

உங்கள் கால் தசைகளை வலுப்படுத்த நீங்கள் தினமும் ஜிம்முக்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பிட்ட சில பயிற்சிகளை வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாக வாழலாம்.

கால் விரல்கள் வலுவாக இருந்தால் கால்களும் வலுவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் வலுபெறும். உங்கள் தசைகள் வலுவடைந்து உடல் முழுவதும் இலகுவாக இருக்கும். எடை குறைவதற்கும் இது நல்ல உடற்பயிற்சியாகும். இந்தப் பயிற்சியானது இடுப்பு, தொடை, இடுப்புப் பகுதி மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.

ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்துக்கொள்ள வேண்டும். இடது புறம் திரும்பிப் படுத்திருந்தால் வலது காலை அப்படியே மேல் நோக்கி தூக்கி இறக்க வேண்டும். அதேபோல், வலது புறம் திரும்பி படுத்திருந்தால்  இடது காலை மேல் நோக்கி தூக்கி பயிற்சி செய்ய வேண்டும்.

உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, கால் தசைகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

தயிரில் கால்சியம் சத்து உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எலும்புகளை வலுவடையச் செய்து, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சத்தமில்லாமல் கொல்லும் வெள்ளை விஷம்: உப்பின் ஆபத்துகள்!
knee pain

உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினால், அது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், அது உடலுக்கு நன்மை பயப்பதோடு, உங்கள் எலும்புகளையும் பலப்படுத்தும். எனவே, முழங்கால் வலிக்கு வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துளசி கீல்வாதத்துக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது, ஏனெனில், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அளவான காபி - ஆரோக்கியத்தின் மந்திரம், ஆனந்தத்தின் திறவுகோல்!
knee pain

ஆகவே, மூட்டுவலிக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் பெற துளசி டீயை ஒரு நாளுக்கு 3 - 4 முறை அருந்தலாம். 

வெந்தயப் பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் மூட்டு வலி குறையும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com