
* இரண்டு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டு ஸ்பூன் சேர்த்து வேக வைத்து, சாதத்தில் கலந்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்து விடும்.
* சூடான அரிசி கஞ்சியில் பனங்கற்கண்டு கலந்து குடித்தால், வறட்டு இருமல் நின்று விடும்.
* உலர் திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால், இதயம் பலமடையும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
* கடுகை நீர் விட்டு அரைத்து உள்ளங்காலில் பற்று போட்டால், காய்ச்சலால் ஏற்படும் தலைவலி நீங்கும். காய்ச்சலும் நின்றுவிடும்.
* மாங்கொட்டை பொடியை காய வைத்து, பொடித்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று பூச்சிகள் மலத்துடன் வெளியில் வந்துவிடும்.
* கம்பளிப்பூச்சி கடித்து விட்டால், அந்த இடத்தில் வெற்றிலையை அரைத்து பற்று போட்டால் போதும். அரிப்பு நீங்கி விடும். வலியும் குறைந்து விடும்.
* இடுப்பு வலி தீர, பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால், வலி நின்று விடும்.
* காலையில் வெறும் வயிற்றில், சிறிது தனியாவை மென்று சாப்பிட, நன்கு பசி எடுக்கும். பசியை தூண்டும் வல்லமை கொண்டது தனியா.
* விளக்கெண்ணையை மூக்கின் மேல் தடவிக் கொண்டால், சளியால் ஏற்படும் மூக்கடைப்பு கரையும்.
* உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை போக்க, வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் அல்லது நெய் கலந்து குடித்தால் போதும். வயிற்று வலி நின்றுவிடும்.
* தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவள்ளி சாறெடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து பருகினால் சரியாகிவிடும்.
* நிலக்கடலை, எள் இவற்றில் செய்யப்படும் உணவுகளை சாப்பிடும்போது, சிறிது வெல்லம் சேர்த்துக் கொண்டால் பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)