பாடாய்படுத்தும் முழங்கால் வலிக்கு நிவாரணம் தரும் சில உணவுகள்!

முழங்கால் வலி
Knee painhttps://www.linkedin.com

முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்னையாகி விட்டது. உணவு முறை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது. மூட்டு வலிக்கு முக்கிய காரணங்கள் முதுமை, அதிக உடல் எடை, முழங்காலில் ஏற்பட்ட காயம். பரம்பரை பாதிப்பு இவையே காரணமாகும்.

மூட்டு பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெற ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் மீன் சாப்பிடலாம். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி வியக்கத்தக்க பலன்களைக் கொடுக்கும்.

வெந்தயம் முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. இதை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு வெந்தயப்பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு உட்கொண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

துளசி அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் பண்புகளைக் கொண்டுள்ளது. முழங்கால் வலியில் நிவாரணம் பெற துளசி டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தலாம்.

இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மட்டுமின்றி, தசைகளுக்கும் சிறந்த சிகிச்சை. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், வலியை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர விரைவில் வலி நீங்கும்.

இதையும் படியுங்கள்:
சிக்கனமும், சிறு சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்!
முழங்கால் வலி

மூட்டுக்களின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உங்களுக்கு நல்ல உணவு மட்டுமல்ல, வைட்டமின் டி யும் தேவை. அதனால் தினமும் சிறிது நேரம் வெயிலில் உட்காருங்கள். மாத்திரைகள் மூலம் வைட்டமின் டி எடுத்துக் கொண்டாலும் சூரிய ஒளி மிகச் சிறந்த தேர்வாகும். செலவின்றி கிடைக்கும் அதன் மகத்துவம் பலருக்கு தெரிவதில்லை. சூரிய ஒளி உடலில் பட்டாலே மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினால் அதிக உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கிறது. இது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும் .எனவே, முழங்கால் வலிக்கு வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல்வேறு நட்ஸ், உலர் பழங்களை சாப்பிடுவது மூட்டு வலிக்கு உதவுவதோடு, பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமை கொட்டை, பாதாம் ஆளி விதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்வ து மூட்டுவலிக்கு நல்ல நிவாரணம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com