திடீரென ஏற்படும் மரணம் - காரணம்? உயர் இரத்த அழுத்தம்!

உயிரையே எடுக்கக் கூடிய உயர் இரத்த அழுத்தம் சில நேரங்களில் "அமைதியான கொலையாளி" (silent killer) என்றும் அழைக்கப்படுகிறது.
BP Problem
BP Problem
Published on

இப்போதெல்லாம் எல்லோருமே பரபரப்பான சூழ்நிலைகளோடு தான் ஒன்றி இருக்கிறார்கள். எதை பற்றியுமே சரியான alert இல்லாமல் இருக்கிறார்கள். திடீர் திடீரென உயிர் போய் விடுகிறது. அதுவும் இப்போதெல்லாம் சிறு வயதினர் தான் அதிகமாக உயிரை இழக்கிறார்கள். இதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதிலே ஒரு முக்கிய காரணமாக கருதப்படுவது இந்த உயர் இரத்த அழுத்தம். இது வருவதே தெரியாமல் நுழைந்து ஆளையே காலி செய்து விடும்.

அதனால் தான் உயிரையே எடுக்கக் கூடிய இந்த உயர் இரத்த அழுத்தம் சில நேரங்களில் "அமைதியான கொலையாளி" (silent killer) என்றும் அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இது பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை.

உயர் இரத்த அழுத்தத்திற்கு பொதுவாக வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமாக மற்றும் மருந்துகளின் மூலமாக சிகிச்சையளிக்கலாம். சரியான சிகிச்சை எடுத்து கொண்டால் ஆபத்தில்லை. ஆனால் பலபேருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாமலேயே போய் விடுகிறது. விளைவு முற்றி போய் பிறகு உயிரை இழக்கிறார்கள்.

உயர் இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன: முதன்மை (அத்தியாவசிய) உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்.

முதன்மை உயர் இரத்த அழுத்தமானது அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் (Primary (Essential) Hypertension) என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வகை உயர் இரத்த அழுத்தமாகும், இதற்கு ஒரு தனி காரணம் இல்லை, மேலும் இது காலப்போக்கில் படிப்படியாக உருவாகிறது.

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary Hypertension) என்பது மற்றொரு மருத்துவ நிலையால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கு இந்த வகை உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் இருந்தால், மருந்துகளை உட்கொள்ளும்போது கூட உங்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சிரமம் இருக்கலாம். இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பொதுவாக உங்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கபடும்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 14 உணவுகள்!
BP Problem

சரியான மருந்துகளை எடுத்து கொண்டு கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்த இரண்டு உயர் இரத்த அழுத்தமும் தமனி சுவர்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது இரத்த நாளங்கள் மற்றும் உடலில் உள்ள பிற உறுப்புகளை சேதப்படுத்தும். இது, இருதய, சிறுநீரக மற்றும் பார்வை பிரச்சினைகள் உள்ளிட்ட பிற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

இந்த உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சில உடல்நலப் பிரச்சினைகள் பின்வருமாறு:

· நீரிழிவு நோய்

· சிறுநீரக நோய்

· அட்ரீனல் சுரப்பி கோளாறுகள்

· தைராய்டு பிரச்சனைகள்

· உடலின் மிகப்பெரிய தமனியைச் சுருக்கும் பிறப்புக் குறைபாடான பெருநாடியின் சுருக்கம்.

· தூக்கத்தில் மூச்சுத்திணறல்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இரத்த அழுத்தத்தை மானிட்டர் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதிகமாக உப்பை உணவில் சேர்த்து கொள்பவர்கள், மது அருந்துபவர்கள், junk foodஐ அதிகமாக சாப்பிடுபவர்கள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே அவர்களும் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய நாட்களில் நிறைய பேருக்கு அறிகுறியே தெரியாமல் BP அதிகமாகி திடீரென heart attack, brain hemorrhage போன்றவை ஏற்பட்டு கண் இமைக்கும் நொடியில் இறந்து விடுகிறார்கள்.

மக்களே, அலட்சியமாக இருக்காதீர்கள் இந்த உயர் இரத்த அழுத்தத்திற்கு வீட்டிலேயே bp monitoring machine வாங்கி ரெகுளராக பரிசோதித்து கொள்ளவும். உங்களுக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எதாவது சந்தேகமாக இருந்தாலோ அல்லது உங்களுடைய bp 130/80 மேல் போனாலோ தயவு செய்து உடனே மருத்துவரை அணுகவும். காலம் கடத்தாமல் தகுந்த மருந்துகளை உட்கொண்டு உங்களின் உயிரை பேணி பாதுகாக்கவும்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை வெல்வது எப்படி? சில பயனுள்ள ஆலோசனைகள்...
BP Problem

தயவு செய்து உங்களின் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துரைக்கவும். நம்மால் ஒரு உயிரை திரும்ப கொடுக்க முடியாது, ஆனால் நாம் நினைத்தால் ஒரு உயிரை காப்பாற்றலாம்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், காலம் பொன் போன்றது!! காலம் தவறினால் உயிர் போய் விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com