நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நம் உடலுக்கு வேண்டியவை வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஆகும். இவை சரியான அளவில் நமக்கு நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கின்றன. இவற்றில் வைட்டமின் சி (Vitamin C) என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
இது நமது உடல் திசுக்களைப் பழுதுபார்ப்பதற்கும், கொலாஜன் உருவாக்கத்திற்கும், நரம்பியக்கடத்திகளின் நொதி உற்பத்திக்கும் உதவுகிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது. இது ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
வைட்டமின் சி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃப்ரூட்), நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ரோக்கோலி, தக்காளி, கிவி, மாம்பழம் போன்றவற்றில் அதிகமாகக் காணப்படுகிறது. சோர்வு, பலவீனம், இரத்த சோகை, சரும பிரச்சனைகள், காயங்கள் ஆற தாமதமாதல், பல் ஈறுகளில் இரத்த கசிவு போன்றவை வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். எனினும், அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.
அஸ்கார்பிக் அமிலம் என்றழைக்கப்படும் வைட்டமின் சி, பல முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது செல்களைப் பாதுகாத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமம், இரத்த நாளங்கள், எலும்புகள், குருத்தெலும்புகள் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம் மற்றும் அஸ்கார்பேட் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சிட்ரஸ் மற்றும் பிற பழங்கள், பெர்ரி மற்றும் காய்கறிகளில் காணப்படும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். சில நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைநிரப்பியாகவும் விற்கப்படுகின்றது.
நமது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு வைட்டமின்- சி மிகவும் அவசியமாகும். ஆனால் இந்த வைட்டமின் சி-யை உடலில் சேமித்து வைக்க முடியாது. இதன் காரணமாக நம் உடலில் வைட்டமின் சியின் குறைபாடு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
இந்த வைட்டமின் சி நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைந்துள்ளது. அதனால், தினமும் இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நாம் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் வைட்டமின் சி-யின் குறைபாட்டை நாம் நம் உடலில் தவிர்க்க முடியும்..
நமக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது நம் உடலில் வைட்டமின் சி குறைவாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இந்த வைட்டமின் சி- ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நமது உடல் செல்களை பாதுகாக்கிறது.
வைட்டமின் சி நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த வைட்டமின் சி உடலில் போதுமான அளவில் இருந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, அடிக்கடி நாம் நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும். நம் உடலில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது போன்றவை வைட்டமின் சி உடம்பில் குறைவாக இருப்பதன் காரணமாக இருக்கலாம். கவனம் தேவை.
மருத்துவ ஆய்வுகளின்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் அதிக அளவு வைட்டமின் சி பெற்ற நோயாளிகள் நோயிலிருந்து விரைவாக குணமடைகிறார்கள். வைட்டமின் சி ஆரோக்கியமான கொலாஜெனை ஆதரிக்கிறது. இது சருமத்தை மென்மையாகவும் மீள்தன்மையுடனும் பராமரிக்கும் ஒரு புரோட்டீன் ஆகும். எனவே காயங்கள் குணமாகவும், இளமையான சருமத்தைப் பெறவும், வைட்டமின் சி நிறைந்த கிவி, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை நாம் போதுமான அளவில் உட்கொள்வது நல்லது.
மேலும், நம் உடல் காரணமின்றி மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவரது உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லாவிட்டால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள், சிராய்ப்புகள் போன்றவை ஏற்படலாம்.
அதோடு வாயின் மூலைகளில் வறட்சி மற்றும் விரிசலை சந்திக்க நேரிடும். வைட்டமின் சி இரத்த உறைதலை ஊக்குவிக்கிறது. உடலின் திசுக்களை வலுவாக பராமரிக்கிறது. வைட்டமின் சி என்பது ஈறு நோயைத் தடுக்க உதவும் ஒரு பயனுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.
நமது உடலில் வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால், உடலின் எந்த மூட்டு பகுதியும் பாதிக்கப்படலாம். ஏனெனில் வைட்டமின்-சி ஆரோக்கியமான கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது. திடீரென்று மூட்டு வலியோ, அடிக்கடி நோயோ நமக்கு அதிகரித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)