உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆரோக்கியத்தைத் திருடும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்!

குடல் புழுக்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வாழ்வதால், இவை நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
Intestinal worms
Intestinal worms
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வயிற்றுக்குள் குடல் புழுக்கள் (Intestinal Worms) என்பது மனிதனின் செரிமான மண்டலத்தில், குறிப்பாக குடலில் வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வாழ்வதால், இவை நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இது பெரும்பாலும் அசுத்தமான உணவு, நீர் மற்றும் சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களால் உண்டாகிறது.

குடல் புழுக்களின் அறிகுறிகள்:

வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்று வலி, குமட்டல் வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடை இழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். அத்துடன் மலத்தில் காணக்கூடிய புழுக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு, உடல் சோர்வு அல்லது பலவீனம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

காரணங்கள்:

குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலம் வருகிறது. சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றது. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத் தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
குடற்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10
Intestinal worms

தீர்வுகள்:

சுத்தம் மற்றும் சுகாதாரம்:

நகங்களை சுத்தமாக வெட்டி வைத்துக் கொள்வதும், சமைத்த உணவுகளை மூடி வைத்து உபயோகிப்பதும், வெளியில் நடக்கும் பொழுது வெறும் காலுடன் நடப்பதை தவிர்த்து செருப்புகள் அணிவதும் என சுகாதாரமான முறைகளை பேணுவது நல்லது. உணவு சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை கிருமி நாசினி சோப்புக் கொண்டு கழுவுவது அவசியம்.

சுகாதாரமான குடிநீர் மற்றும் உணவு:

கொதிக்க வைத்து ஆற வைத்த நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுவதும், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு சிறிது வெதுவெதுப்பான நீரில் கழுவுவதும் அவசியம்.

சமையல்: மாமிச உணவுகளை குறிப்பாக பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை நன்கு முழுமையாக வேகவைத்து சமைத்து உண்ண வேண்டும்.

செல்லப் பிராணிகள்:

வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு தொடர்ந்து கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கான முக்கிய குறிப்பு:

மணலில் விளையாடிய பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும், கழிவறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்கு கழுவ வேண்டியதும் அவசியம். முக்கியமாக உணவு சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

தடுப்பு உணவுகள்:

பூண்டு, இஞ்சி, தேங்காய், பூசணி விதைகள், மஞ்சள் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது குடற்புழுக்களை வரவிடாமல் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
குடற்புழுக்களை நீக்க சில எளிய வீட்டு வைத்தியம்!
Intestinal worms

வயிற்று வலி, பசியின்மை அல்லது மலத்தில் புழுக்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்துகளை (Deworming tablets) எடுத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக அசுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் மூலம் இந்த புழுக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com