ஜப்பானியர்களின் ஃபிட்னஸ் ரகசியம்!

Japanese
Japanese
Published on

ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடன், ஃபிட்டாக இருப்பதற்கு அவர்களின் உணவுப் பழக்கங்களும், மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையும் முக்கிய காரணங்கள். அதிலும் குறிப்பாக, அவர்களின் ஃபிட்டான உடல் அமைப்பிற்கு அவர்கள் அருந்தும் ஒரு பாரம்பரிய பானம் தான் முக்கிய காரணம். 

இஞ்சி மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம், உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. தொப்பையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பல்வேறு உடல் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தி, சரும பொலிவையும் மேம்படுத்துகிறது. இந்த ஜப்பானிய நீரின் நன்மைகளையும், தயாரிக்கும் முறையையும் இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம். 

ஜப்பானிய நீரின் அற்புத நன்மைகள்:

வயது அதிகரிக்கும் போது, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படுகிறது. இது மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் கொண்டு வரும். ஆனால், இஞ்சி - எலுமிச்சை பானம் கொழுப்பைக் கரைத்து, தொப்பையைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. தொப்பை உள்ளவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பானம் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இஞ்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் இரத்த குழாய்களின் அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே, இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால், இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் செரிமான அமைப்பு எப்படி வேலை செய்கிறது தெரியுமா? 
Japanese

செரிமான பிரச்சனைகள் இருந்தால், தொப்பை விரைவில் வந்துவிடும். ஆனால், இந்த பானத்தில் உள்ள இஞ்சி மற்றும் எலுமிச்சை நொதிகள், செரிமானத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன. மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

முகப்பரு மற்றும் பொலிவிழந்த சருமம் உள்ளவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களை ஆரோக்கியமாக வைத்து, சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ஜப்பானிய நீர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  • 1 இன்ச் இஞ்சி

  • 1 1/2 கப் தண்ணீர்

  • பாதி எலுமிச்சை

இதையும் படியுங்கள்:
வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் இஞ்சி சொரசம் மற்றும் இஞ்சித் துவையல்!
Japanese

செய்முறை:

  1. இஞ்சியை தோல் நீக்கி, தட்டி, தண்ணீரில் போட்டு 5-6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

  2. வெதுவெதுப்பானதும், வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும்.

இந்த நீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், அதிக பலன் பெற, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும், உடலின் மெட்டபாலிசம் மேம்படும், கொழுப்பு எரிக்கப்பட்டு, தொப்பை குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com