

‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல் ஒவ்வொரு வேளையிலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவிற்கு என்று சில கட்டுப்பாடுகள்(Food diet) இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகள் என்னவென்று தெரிந்துக் கொள்வோமா?
காலை (Breakfast) உணவுகள் நம் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை(metabolism) பராமரிப்பதில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. எனவே, நாம் ஒரு நாளில் ஒவ்வொரு கட்டத்திலும் பொருத்தமற்ற உணவுகளை உட்கொண்டால் சோர்வு, மோசமான செயல்பாடு(poor concentration), எடை ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.
காலை உணவில் அதிக வறுத்தப் பொருட்கள்(fried items), சர்க்கரை உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் வயது வித்தியாசமின்றி ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். பின்னர் உடல் சக்தியில் இறக்கத்தை ஏற்படுத்தி உடலைச் சோம்பலாக்குகின்றன.
அதற்குப் பதிலாக நம் அன்றாட காலை உணவில் கார்போஹைட்ரேட்டுகள்(carbohydrates), கொழுப்பில்லா புரதம்(lean protein), நார்ச்சத்து(Fiber) ஆகியவற்றில் கவனம் செலுத்தி எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் காலை முழுவதும் தேவையான ஆற்றலைத் தக்க வைக்க முடியும்.
மதிய உணவு (Lunch): மதிய உணவில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்(refined grains), கிரீமி சாஸ்கள்(creamy sauces) அல்லது துரித உணவுப் பொருட்களை(fast-food items) அதிகமாக சாப்பிடுவது உடலுக்குச் சிக்கலை தரலாம்.
இயல்பாக மதிய உணவுதான் நமக்குத் தேவையான உற்பத்தித்திறனை(productivity) அதிகரிக்கும். அதில் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சேர்த்தால் அவை செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் தூக்கம் வரும்.
அதேபோல் மதிய உணவில் அதிகப்படியான காஃபின்(Caffeine) சார்ந்த பொருட்களை குறைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது நீரேற்றத்தில்(Hydration) இடையூறு ஏற்படுத்தக்கூடும். அதனால் காய்கறிகள், முழு தானியங்கள், தேவையான புரதம்(lean protein) கொண்ட மிதமான உணவு நிலையான ஆற்றலை தரும்.
Dinner இரவு உணவில் அதிக அளவு இறைச்சி(Meat), வறுத்த சிற்றுண்டிகள்(Snacks) அல்லது சர்க்கரை இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகளை இந்நேரங்களில் சாப்பிடுவது செரிமானத்தைப் பாதிக்கிறது, தூக்கத்தின் தரத்தையும் சீர்குலைக்கிறது.
எனவே, இரவு உணவு இலகுவாக இருக்க வேண்டும். அதற்கு சூப்கள், வேகவைத்த காய்கறிகள் அல்லது குறைவான புரதம்(Lean protein) போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்திற்கு(Metabolism) அழுத்தம் தராமல் உடலை அமைதியாக உணரவைக்கும்.
எந்த வேளை உணவை தவிர்க்கலாம்?
ஆராய்ச்சிப்படி(Research) உணவைத் தவிர்ப்பது ஊட்டச்சத்து குறைபாடுகள், மனநிலை மாற்றங்கள், பின்னர் அதிகமாகச் சாப்பிடுவதற்குக்கூட வழிவகுக்குமாம். இதில் காலை உணவைத் தவிர்த்தால் அது வளர்சிதை மாற்றம்(Metabolism), செயல்பாடை(Concentration) எதிர்மறையாகப் பாதிக்கும்.
அதே நேரத்தில் மதிய உணவைத் தவிர்ப்பது பெரும்பாலும் மாலையில் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. நீங்கள் ஒரு வேளையை தவிர்க்க வேண்டும் என்றால் இரவு உணவைத் தவிர்ப்பது சற்று பாதுகாப்பானது.
ஏனெனில், அந்நேரத்திற்கு உடலுக்கு உடனடி ஆற்றல் தேவை இல்லை. உடலுக்கு அப்போது ஓய்வுதான் தேவை. இருப்பினும் இதுகூட அவ்வப்போது இருக்கவேண்டும் தவிர (Temporary is fine). அதை ஓர் பழக்கமாகவே மாற்றிட கூடாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)