பொதுவாக, ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணெய் சேர்ப்பதைத் தவிர்ப்பார்கள். ஆனால், உண்மையில் வெண்ணெயில் சத்துக்கள் நிறைய உள்ளன. வெண்ணையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த நாளங்களை பலப்படுத்துகின்றன. இது கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது பற்சிதைவை தடுக்கும். வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
வெண்ணையில் உள்ள கொலஸ்ட்ரால் மூளைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் நன்மையே தருகிறது. இதில் உள்ள வைட்டமின் கே கண்களையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. வெண்ணையின் சிறப்பே லேசான புளிப்பு சுவையுடன் பளபளப்பாக இருப்பதும் அபாரமான சுவையிலும் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் மாடுகள் இருக்கும். அவற்றிலிருந்து கிடைக்கும் பால் பருகுவதற்கும், தயிருக்காகவும் பயன்படும். தயிரைக் கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுத்து காய்ச்சுவார்கள். வெண்ணையின் ரகசியம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரத்தில் உள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த வெண்ணெய், பருத்தி விதை, கொழுக்கட்டைப்புல் போன்றவற்றை கொடுப்பதன் விளைவாக பால் அதிகக் கொழுப்புடன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்கும். வெண்ணையின் சிறப்பே கால்நடைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பும், அதற்கு வழங்கப்படும் தீவனத்தின் தரத்தையும் பொறுத்தே அமைகிறது.
கால்நடைகள் உள்ள வீடுகளில் அதிகப்படியான பால் கிடைக்கும். அதனை சூடாக்கி தயிர் சேர்த்து மண் பானைகளில் உறைய வைப்பார்கள். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு தயிர் பானையாவது இருக்கும். வெண்ணெய் எடுப்பதை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகிறது. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய வெள்ளை வெண்ணெயானது உடல் எடையைக் குறைக்கும். காரணம் இதில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் பசியைத் தூண்டாது. அதனால் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. இதுவே உடல் பருமனைத் தடுக்கும் முக்கியக் காரணியாகும்.
வெண்ணையில் வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அறிவாற்றல் செயல்பாடுகளுக்கும், ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படும். வெண்ணையில் உள்ள கொழுப்புச்சத்து உடல் எடையை கூட்டும் என்று பயப்படுகிறோம். ஆனால், இது தவறு. ஆரோக்கியமான கொழுப்பு நம் எடை இழப்பிற்கு புரதம் போல் பயன்படும். இவை எடையைக் குறைக்க உதவும். எலும்புகளை வலுவாக்கும். மூட்டுகளை வலுவடையச் செய்யும். இதில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. சரும ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் உதவும்.
வெண்ணையில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் ஈ, ஏ, கே2 போன்றவை நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த வெண்ணெய் நம் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. நம் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரக்கூடியது. வெண்ணையை அழகுக்காகவும் பயன்படுத்தலாம். வெண்ணெயுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் சரும சுருக்கம் நீங்கும், முகம் பொலிவு பெறும்.
வெண்ணையை காய்ச்சி எடுக்கும் நெய் நல்ல மணமுடன் இருக்கும். உணவில் நெய் சேர்ப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். முதலாவதாக மூளை நன்கு வேலை செய்யும். கொழுப்புச் சத்து, எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இது நெய்யில் அதிகம் உள்ளது. குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் பருப்பு சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிடுவது சிறந்த மலமிளக்கியாக செயல்படும். உணவில் நெய் சேர்ப்பது உணவின் சுவையைக் கூட்டுவதுடன் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். நெய் சிறந்த மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் இதில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.