நினைவுபடுத்துகிறோம் மக்களே! கோடையை சமாளிக்க குளு குளு டிப்ஸ்...

summer heat
summer heat
Published on

கோடையில் தண்ணீர் தாகமும், உடல்சோர்வையும் தவிர்க்க எலுமிச்சை சாறுடன், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து பருகினால் தாகம் கட்டுப்படும்.

கோடையில் வரும் ஜலதோஷத்திலிருந்து விடுபட மோரில் சிறிது மிளகுத்தூளை சேர்த்து பருகலாம். மோருடன் கீழாநெல்லி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் குறையும்.

கோடையில் வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உடல் உஷ்ணப் பிரச்னை ஏற்படும். அவர்கள் மோரில் சிட்டிகை சீரகத்தூள், சிட்டிகை வெந்தயத்தூள், உப்பு சேர்த்து குடித்தால் உஷ்ணம் குறையும்.

கோடையில் மூல நோய் பிரச்னை உடையவர்கள் அதிகம் அவதி பட நேரிடும். அவர்கள் அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.

கோடைகாலத்தில் காலை உணவுடன் கஞ்சி வகைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கம்பு, கேழ்வரகு கூழ் வகைகளை சாப்பிடலாம். பழைய சாதத்துடன் தண்ணீரும், மோரும், உப்பு கலந்து சாப்பிடலாம். சாதத்தை வடித்த கஞ்சியுடன் உப்பு கலந்து பருகலாம். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் பருகலாம். அதுபோல் வெந்தயத்தை மோரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் சூடு, தலையில் உள்ள சூடு குறையும்.

கோடையில் நீர் நிறைந்த காய்கறிகளை சமையலில் சிறு சிறு துண்டாக நறுக்கி சாலட்டாக சாப்பிடலாம். கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், தர்பூசணி போன்றவற்றை சிறு துண்டுகளாக்கி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
நெல்லிக்காய் ஜூஸ் + மிளகு தூள் - மேஜிக் செய்யும் இயற்கை மருத்துவ காம்போ!
summer heat

கோடை காலத்தில் தயிரை அதிகம் சாப்பிடுவது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதாவது செரிமானத்தை எளிமைப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கோடையில் கடைந்த மோரில் அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காய சாறும், கலந்து பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு போட்டு குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாமல் கூலாக இருக்கும்.

வெள்ளரிக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி, அதில் கொத்தமல்லி, இஞ்சி, வெட்டிவேர் சிறிதாக நறுக்கி போட்டு உச்சி நேர வெயிலில் குடித்தால் வயிறு கூலாக இருக்கும்.

வெட்டிய எலுமிச்சையையும் வெட்டி வேரையும், நன்னாரி வேரையும் துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் போட்டு 6 மணி நேரம் கழித்து எடுத்து விட்டு அந்த தண்ணீரை அருந்தினால் உடல் குளிர்ச்சி அடையும்.

வெயிலில் செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு சிறுநீர் எரிச்சல் ஏற்படும். தாகம் எடுக்கும்போது நீர் குடிக்காமல் இருப்பதுதான் காரணம். தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிப்பது அவசியம்.

குறைந்த அளவு இஞ்சி கலந்த கரும்பு சாறு அருந்துவதால் சிறுநீர் பிரச்னைகள் வராது. இளநீரும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை தோல் பொடி, கிச்சிலிக்கப் பொடி பயத்த மாவு ஆகியவற்றைக் கலந்து தேய்த்து குளித்தால் வேனல் கட்டிகள் வராது.

நெல்லிக்காயை தண்ணீர் சேர்த்து அரைத்து உடலில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர வியர்க்குரு வராது. சோறு வடித்த கஞ்சி, நுங்கு நீர் போன்றவற்றை உடலில் தேய்த்து வந்தாலும் வேர்க்குரு மறையும்.

கூடுமானவரை காட்டன் துணிகள் உடுத்தவும்.

குழந்தைகள், பெரியர்வர்கள் இரவில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். பனங்கற்கண்டு சேர்த்த பால், திராட்சை, கிஸ்மிஸ் சாப்பிடலாம்.

கோடையில் வெளியில் செல்லும்போது குடை, செருப்பு, தொப்பி, கண்ணாடி அணிந்து கொண்டு சென்றால் உடல் சூட்டை தணிக்கலாம்.

விலாமிச்சை வேர் பாய், வெட்டி வேர் பாய் ஜன்னலில் கட்டி தண்ணீரை தெளித்து வைத்தால் அதன் வழியே வரும் ஈரக்காற்று வீட்டுக்குள் வரும் வெப்பத்தை தணிக்கும்.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் இந்த 5 இலைகளை சாப்பிட்டால் போதும்!
summer heat

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com