
1. வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, புடலங்காய், கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை கலந்த வெஜிடபிள் சாலட்டை, இந்த சமயத்தில் தினமும் ஒரு வேளையாவது சாப்ப்பிட்டு வர உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும்.
2. துளசி, சந்தனம், வேம்பு, மற்றும் மஞ்சள் இவற்றை நைசாக அரைத்து உடம்பில் பூசினால் வேனல் கட்டிகள் ஆறும், சருமம் மிருதுவாகும்.
3. வியர்வை நாற்றம் தேகத்தில் அதிகமாக இருந்தால், வெந்நீரில் இரண்டு ஸ்பூன் சீயக்காய்த் தூள், மற்றும், வெந்தயத்தூள் கலந்து, குழைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உடல் மற்றும் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் அறவே நீங்கி விடும்.
4. மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் உள்ளிட்டவை கோடையை சமாளிக்க அவசியமாகும். இவை வீணாகும் நீரை சேமிக்க மட்டுமல்ல, வீட்டையும் குளுமையாக்கும். உடலிலும் நீர் வறட்சி ஏற்படுவதை தடுக்கும், தவிர இவை கோடையில் வரும் உஷ்ண நோய்களை போக்கும்.
5. வெயிலில் போய்விட்டு வந்த பின் நம்மில் பலருக்கும் முகம் அப்படியே கறுத்துப் போகும். இந்த கறுமையை அகற்ற, கொஞ்சம் இளநீருடன், அதில் பாதியளவு பால் கலந்து, முகத்தில் அப்ளை செய்து கொஞ்சம் நேரம் கழித்து முகம் கழுவினால் கறுமை அகலும்.
6. சம்மரில் நாம் எதிர் கொள்ளும் பெரிய பிரச்னை உடல் உஷ்ணம் தான். உடல் உஷ்ணத்தை தணிக்க தினமும் பிஞ்சு வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.
7. இந்த சமயத்தில் தினமும் இரண்டு வேளை பச்சைத் தண்ணீரில் குளிப்பது உடல் உஷ்ணத்தை தணிப்பது மட்டுமல்லாமல் சரும நோய்களும் அண்டாமல் இருக்கும்.
8. இந்த சமயத்தில் தயிருக்கு பதில் மோர் அருந்துதல் உடல் உஷ்ணத்தை குறைக்க நல்லது.
9. சம்மரில் அடிக்கடி டீ, காபி குடிப்பதால், சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்படும். இந்தப் பானங்கள் நம் உடலில் நீர்வறட்சியை ஏற்படுத்தும். இந்தப் பானங்களுக்கு பதிலாக மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு பருகலாம்.
10. அதுபோல் வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை, கரு நீலத்திலான திரைச்சீலைகளை பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் வீட்டுக்குள் வராது.
11. நீர்மோரில் தக்காளி பழச்சாறு கலந்து அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பருகினால் சம்மரில் வரும் களைப்பும், சோர்வும் பறந்து விடும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)