நடைப் பயிற்சியில் சிரமமா? உங்கள் உடல் சொல்லும் எச்சரிக்கைகள்!

tiredness while Walking
Walking
Published on

நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது கால்கள் கனமாக இருப்பதை உணர்கிறீர்களா? வழக்கமாக நடப்பதை விட மெதுவாக நடக்கிறீர்களா? மூச்சு விடுவதில் சிரமம் தெரிகிறதா? இவை அனைத்தும் உங்கள் மூளை, நரம்பு தசைகள் எல்லாம் அழுத்தத்தில் உள்ளதையே குறிக்கின்றன. 

சோர்வுக்கான காரணம்:

நீங்கள் இரவு சாப்பாட்டை  தவிர்த்திருக்கலாம். இரவு சரியான தூக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அதனால் சோர்வடைந்து நடையில் வித்தியாசம் தெரியலாம். இந்த ப்ரச்னைகள் தொடர்ந்து இருந்தால்  நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தசைகளுக்கு ஆக்சிஜன் தேவையானது‌. உங்கள் நரம்புகள் மூட்டுகள் மற்றும் மூளை நல்ல செயல்பாட்டில் இருக்கவேண்டும்.

உங்கள் நடை உணர்த்தும் அறிகுறிகள்:

பி12 குறைபாடு

உங்கள் கால்கள் நடக்கும் போது மரத்துப்போனால், அது பி12 குறைபாடையே குறிக்கிறது. நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு இது மிகவும் அவசியம். நீங்கள் நடக்கும் நடையிலிருந்து அதன் குறைபாட்டை உணரலாம்.  இரத்த சோதனையில் பி12 குறைபாடு தெரியவரும். நீங்கள் நடக்கும் போது உங்கள் ஷூக்களில் மண் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதயம்

நீங்கள் நடக்கும்போது மூச்சு வாங்குதல், மார்பு பிடிப்பதாக இருப்பது போல் தோன்றுதல் மற்றும் கால்களில் சோர்வு, இவை எல்லாம் உங்கள் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும். பொதுவாக  இதை Peripheral Artery Disease  என்று கூறுவார்கள். கால்கள் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கும். ஆக்சிஜன் கால்களுக்கு செல்லாததே இதற்குக் காரணம். உங்கள் கெண்டை காலில் எரிச்சல் ஏற்படலாம். அது உட்காரும் போது சரியாகும். இது Peripheral Artery Disease-ன் பண்பாகும்.

நீரிழிவு

அதிக சர்க்கரை அளவு உங்கள் கால் நரம்புகளை பாதிக்கும்.  இந்த நிலையில் கால் மரத்துப் போவது, ஊசி குத்துவது போன்ற நிலைமை ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படும். சர்க்கரையை கட்டுப்படுத்த, இது குறையும்.

இதையும் படியுங்கள்:
ஒரே பார்ட்னருடன் வாழ்நாள் முழுவதும் உறவாடும் அதிசய பறவைகளும் விலங்குகளும்!
tiredness while Walking

மூளை பாதிப்பு

நீங்கள் நடக்கும் போது மூளை ஒத்துழைக்கவில்லை என்றால்  அது நரம்புபிரச்னை என்றே அறிகுறியாகும். இது பார்கின்சன் மற்றும் டெமன்ஷியா பாதிப்புகள் இருப்பதை உணர்த்தும். உங்களால் சரிவர நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாது.  நீங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சியை கவனித்து அந்த மாற்றம் பல நாட்கள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இடுப்பு பலவீனம்

இடுப்பு பலவீனமாக இருந்தாலும் நடப்பதில் சிரமம் இருக்கும், தசைகளில் சமன்பாடு இருக்காது. 

மேற்கூறிய பிரச்னைகளை மருத்துவ அணுகுமுறை மூலம் நிவர்த்தி சேர்க்கலாம்.

முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com