தக்காளி ஜூஸ் Vs மாதுளை ஜூஸ்: இரத்த அழுத்தத்தைக் குறைக்க எது சிறந்தது?

பொட்டாசியம், லைகோபீன் மற்றும் நைட்ரேட்டுகள் - உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உண்மை!
Tomato juice vs Pomegranate juice -  இரத்த அழுத்தம்
Tomato juice vs Pomegranate juice - இரத்த அழுத்தம்
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

மாதுளை பழம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் தக்காளியை விடச் சிறந்தது. ஆனால் அது தாற்காலிகமானது. மேலும் தக்காளி ஜூஸாக இருந்தால் குறைந்த அளவு உப்பும், மாதுளை ஜூஸாக இருந்தால் சீனி சேர்க்காமல் உட்கொண்டால் இதயத்திற்கும் சிறந்தது. இரண்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய பண்பைப் பெற்றது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.

Pomegranate juice - இரத்த அழுத்தம்
Pomegranate juice - இரத்த அழுத்தம்

மாதுளை ஜூஸ்

ஆராய்ச்சிகளின்படி தினமும் 5 அவுன்சிலிருந்து 10 அவுன்ஸ் மாதுளை ஜூஸ் குடிப்பதால் 5 லிருந்து 7 அளவு இரத்த அழுத்தம் குறைவதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இது தாற்காலிகமானதாக அறியப்படுகிறது.

மாதுளை ஜூஸில் இயற்கையான நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறி இரத்த நாளங்களை மெல்லியதாக்குகிறது‌. மாதுளை ஜூஸில் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஒரு கப் ஜூஸில் சுமார் 533 மில்லிகிராம் அளவு பொடாசியம் உள்ளது‌, அதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.

இதில் ஆன்டி ஆக்சிடண்டுகள் இருப்பதால் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்‌ நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும். இது திசுக்களின் அழற்சியைக் குறைக்கக் கூடியது. ருமடாய்டு ஆர்த்தரைடிஸ் தடுக்கப்படும்‌. தேகப்பயிற்சிக்குப் பிறகு உட்கொள்வதால் தசைகளுக்கு வலிமை தருகிறது. மாதுளை ஜூஸில் யூரோலிதின் ஏ என்ற வேதிப்பொருள் மூளை ஆரோக்கியத்திற்கும் சிறந்தது‌. டிமென்ஷியா மற்றும் அல்சீமியர் நோயை இது தடுக்கும். இது ப்ரீபயாடிக்காக செயல்படுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்‌. இது இரத்தச் சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கிறது.

மாதுளை ஜூஸ் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு சிறிது பிரச்னையை ஏற்படுத்தும். இதில் தக்காளி ஜூஸைவிட கலோரிகள் அதிகம். இயற்கை சர்க்கரை கொண்டது‌. தக்காளி ஜூஸ் உட்கொள்ளும் போது அதிக உப்பைத் தவிர்க்கவும்.

Tomato juice - இரத்த அழுத்தம்
Tomato juice - இரத்த அழுத்தம்

தக்காளி ஜூஸ்

மாதுளையை விட இது குறைந்த சக்தி படைத்தாலும் இதில் உள்ள லைகோபீன் என்ற வேதிப்பொருள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது‌. இது சிறந்த ஆக்ஸிடன்ட்ச் செயல்பட்டு நம் இரத்த நாளங்களில் உள்ள திசுக்களை ப் பாதுகாப்பாக வைக்கும் பண்பைப் பெற்றுள்ளது. இதில் மாதுளையை விட சிறிது குறைவான அளவு பொட்டாசியம் இருந்தாலும் அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது‌. இதன் லைகோபீன் ஆன்ஜியோடென்சின் என்ற இரத்தத்தை தடிமனாக்கும் பொருளை தடுப்பதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

ஒருநாளைக்கு 7 அவுன்ஸ் தக்காளி ஜூஸ் உட்கொள்வதால் இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவருகிறது‌.

இது இரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் ஒரு பொருளான பொட்டாசியம் ரெனின்-ஐத் தடுக்கிறது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்க்கவேண்டும்‌

இரண்டு ஜூஸ்களிலும் நன்மைகளா இருந்தாலும் தக்காளி ஜூனில் மாதுளையைவிட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
சியா விதையா? ஆளி விதையா? உங்கள் உடலுக்கு எது சிறந்தது? இதோ முழு ஒப்பீடு!
Tomato juice vs Pomegranate juice -  இரத்த அழுத்தம்

100 கிராம் தக்காளி ஜூஸில்

86 கிராம் பரதம்

4 கிராம் நார்சத்து

3 கிராம் இரும்புச்சத்து

23 மைக்ரோகிராம் சேர்த்து

49.8 கிராம் சி சத்து

270 மைக்ரோ கிராம் பீடா கரோட்டின் உள்ளது

109 கிராம் மாதுளையில்

15 கிராம்புரதம்

1 கிராம் நார்சத்து

1 மிகிராம் இரும்பு

1 மில்லிகிராம் சத்து

உங்கள் இரத்த அழுத்தம் குறைய ஜூஸை மட்டும் நம்புவதை விட காய்கறிகள் பழங்கள் மற்றும் முழு தான் மக்களையும் உட்கொள்ள வேண்டும்‌

இரண்டு ஜூஸ்களிலும் நன்மைகள் உள்ளதால் உங்கள் உடல் பிரச்னைகளுக்குத் தகுந்தாற்போல் மருத்துவ ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
கிரான்பெர்ரி vs ப்ளூபெர்ரி: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? ஊட்டச்சத்து உண்மைகள்!
Tomato juice vs Pomegranate juice -  இரத்த அழுத்தம்

Reference

logo
Kalki Online
kalkionline.com