உடல் பலவீனத்தைப் போக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு!

தண்ணீர்விட்டான் கிழங்கு
தண்ணீர்விட்டான் கிழங்குhttps://hbkonline.in
Published on

கிழங்குகளை உணவாகப் பயன்படுத்துவது, மருந்தாகப் பயன்படுத்துவது என இரு வகைப்படுத்தலாம். ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பதால் உணவாகப் பயன்படுத்தப்பட்டுவரும் கிழங்குகளும் மருத்துவப் பலன் அளிப்பவை. அதில் ஒன்று தண்ணீர்விட்டான் கிழங்கு.

இந்தக் கிழங்குச் செடி 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், இது ஒரு மூலிகை வகையை சேர்ந்தது. இது நாட்டு மருந்து கடைகளில் பவுடர் வடிவில் கிடைக்கும். தித்திப்பு சுவையுடன் இருக்கும் இது முழுக்க முழுக்க மருத்துவ குணங்களை கொண்ட கிழங்கு என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இது அபரிமிதமான நார்ச்சத்து கொண்டது .

சதாவரி, சல்லகட்டா, நீர்வாளி, நாராயணி, சதாவல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்ற தண்ணீர்விட்டான் கிழங்க குளிர்ச்சித் தன்மை கொண்டது. இதன் வேர்கள் உடலை பலப்படுத்தவும், உள் உறுப்புகளின் புண்களை ஆற்றவும், ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் உதவும். மேலும் தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும்.

பெண்களின் நலனுக்கென்றே படைக்கப்பட்ட தண்ணீர்விட்டான் கிழங்கின் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து 200 மில்லி நீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகி வர சில பருவமடைந்த பெண்கள், மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாக தோற்றமளிப்பார்கள். அவர்களுக்கு இந்த கஷாயம் மிகவும் நன்மை தரக்கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்கு கழுவி அதன் நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி நன்கு தூள் செய்து அதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யுடன்  காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலம் பெறும், கர்ப்ப காலத்தில் தொடர்ந்து இந்த கிழங்கை பெண்கள் சாப்பிடும்போது, பிரசவம் எளிதாகும் . முக்கியமாக, பனிக்குடத்தில் உள்ள தண்ணீர் குறையாமல் சுகப்பிரசவம் ஏற்பட இந்த கிழங்கு துணைபுரிவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு  தாய்ப்பால் நன்றாக சுரக்க இந்த கிழங்கை தினசரி சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உண்பதற்கு முன் ஊற வைக்க வேண்டிய 7 வகை உணவுகள் எவை தெரியுமா?
தண்ணீர்விட்டான் கிழங்கு

மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இந்த கிழங்கு உதவும். அதற்கு பசுமையான தண்ணீர்விட்டான் கிழங்கு வேரை அலசி சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொண்டு 4 ஸ்பூன் அளவுக்கு சாற்றை, இரண்டு ஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் 5 நாட்கள் சாப்பிட்டு வர அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்படும். மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும்.

‘மெனோபாஸ்’ என்று சொல்லப்படும் மாதவிடாய் நிற்கும் நேரங்களில் பதற்றம், பயம், மன அழுத்தம் போன்றவை பெண்களுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகளாகும். சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் உடலில் ஏற்படும். இந்த பிரச்னைகளையும், தண்ணீர்விட்டான் மூலிகை தீர்க்கிறது. தண்ணீர்விட்டான் பொடியை ஒரு ஸ்பூன் அளவு தினமும் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் 30 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர இளமை மிடுக்கு ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உடலை சரிசெய்யும். காச நோயின் தீவிரத்தை குறைக்கும். இந்த கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும். மேலும், நீரிழிவு நோயும் கட்டுப்படும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடும் ஆற்றல் மிக்கது. இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இதயம், எலும்புகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது

கால்களில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேரை சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் கால்களிலும், பாதங்களிலும் நன்கு பூசி வர சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com