நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பல ஊட்டச்சத்துக்களில் விட்டமின் D மிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு இந்த விட்டமின் சத்து குறைந்தால் உடலில் பல குறைபாடுகள் ஏற்பட்டு, நோய்கள் உண்டாக்கலாம். இந்த பதிவில் விட்டமின் டி சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
விட்டமின் டி சத்து குறைவதால் முதலில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும் நம்முடைய எலும்புகள் பலவீனமடைந்து முறிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். அதேபோல எப்போதும் சோம்பலாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு இருக்கலாம். விட்டமின் டி சத்து உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது. பாஸ்பரஸ், கால்சியம் போன்றவற்றை உடல் உறிஞ்சி தக்கவைக்க விட்டமின் டி தேவை.
இப்படி பல விஷயங்களுக்கு நமக்கு தேவைப்படும் விட்டமின் டி குறையாமல் இருக்க தினசரி சூரிய ஒளியில் நாம் நின்றாலே போதும். காலை மற்றும் மாலை வேளையில் வரும் சூரிய ஒளியில் விட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலின் ரத்த சிவப்பு ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்து, விட்டமின் டி சத்தை அதிகரிக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளியில் இருங்கள்.
சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 600UI அளவில் விட்டமின் டி தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது அனைத்தையும் நீங்கள் வெயிலில் இருப்பது மூலமாக மட்டுமே பெற்று விட முடியாது. சில உணவுகளை எடுத்துக் கொள்வது மூலமாகவும் தினசரி உடலுக்குத் தேவையான விட்டமின் டி நாம் பெற முடியும்.
முழு தானியம், ஆரஞ்சு பழம், பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும்பாலில் விட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. நீங்கள் அசைவம் உண்பவராக இருந்தால் முட்டையின் கரு இதன் சிறந்த மூலமாகும். எனவே இனி தினசரி உடலுக்குத் தேவையான விட்டமின் டி நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதில் கவனம் செலுத்துங்கள்.