எச்சரிக்கை! அசாதாரண உபாதைகளை சுட்டிக் காட்டும் சாதாரண அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்!

Physical symptoms and effects
yawn, Halitosis, Hair fall, Foot Swelling
Published on

நம் உடல் எவ்வளவு அற்புதமானது என்பதை நாம் நன்றாக இருக்கும் போது உணருவதில்லை. அதில் ஏதேனும் ஒரு பிரச்னை என்றால் மட்டுமே நமது உடலை கவனிக்கத் தொடங்குகிறோம். உண்மையில், நமது உடல் நமக்கு வரும் பிரச்னைகளை முன்கூட்டியே அறிவித்து விடும் திறன் கொண்டது.

அந்த அறிகுறிகளை அலட்சியம் செய்தால் மட்டுமே நமது உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது. ஆனால் அது தரும் எச்சரிக்கைகளை உணர்ந்து அதற்கான தீர்வை காலதாமதம் இன்றி பெற்றால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

1. அடிக்கடி கொட்டாவி

கெட்ட ஆவிதான் கொட்டாவி ஆகிவிடுகிறது. கொட்டாவி (yawning) பொதுவாக ஆபத்தல்ல, இது உடலின் இயல்பான செயல்பாடுதான்; ஆனால் அதிகமாக அல்லது தொடர்ந்து கொட்டாவி வருவது நமது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும்.

கொட்டாவி மூலம் உடல் தனது சுவாசத்தை சீராக்க முயல்கிறது எனலாம். பொதுவாக தூக்கக் குறைவு, சலிப்பான மனநிலை, அதிக உணவு, மன அழுத்தம் இவைகளே கொட்டாவிக்கு ஆபத்து இல்லாத காரணிகள். ஆனால் தொடர்ந்து அதிக கொட்டாவி வருவதன் காரணங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய பிரச்னைகள்.

இதையும் படியுங்கள்:
உடல் காட்டும் நோய் அறிகுறிகளும் தீர்வுகளும்!
Physical symptoms and effects

ஸ்லீப் அப்னியா (Sleep Apnea), இதயம் சார்ந்த பிரச்சினைகள், வாஸோவேகல் ரியாக்சன்(vasovagal reaction) எனப்படும் குறைவான இரத்த ஓட்டம், மைக்ரேன் போன்ற நரம்பியல் காரணங்கள், அரிதாக மூளை தொடர்பான சில குறைபாடுகள், சில மனநிலை மருந்துகள் போன்ற உபாதைகள் இருப்பதை இந்த தொடர் கொட்டாவியானது சுட்டிக்காட்டுகிறது.

2. அதிக வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் (Halitosis) பொதுவாக பலருக்கும் தீராத பிரச்னை; உண்மையில் அதற்கான காரணம் வயிறு கோளாறுகளே என்பது தெரியுமா? குறிப்பாக, கேஸ்ட்ரிக் ரிஃப்ளக்ஸ் (Gastric reflux - GERD) உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்னை இது; இதுமட்டுமின்றி, உமிழ்நீர் குறைவதன் காரணமாக வறண்ட வாய் (Dry mouth), சரியாகச் சுத்தம் செய்யப்படாத நாக்கின் மேற்பரப்பில் பாக்டீரியா அதிகரிப்பது, சிவந்த வீக்கம் மற்றும் எளிதில் இரத்தம் வருதல் போன்ற ஈறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தொண்டை டான்சில் புண் (Tonsil stones) உருவாக்கும் வெள்ளை துகள்கள் போன்ற பாதிப்புகள் இருப்பதையும் வாய் துர்நாற்றம் காட்டிக்கொடுக்கிறது.

3. காதில் அடிக்கடி ரீங்காரம் (Tinnitus) (காதில் ஒலி)

சிலருக்கு இயல்பாகவே காதுகளில் அடிக்கடி 'நொய்ங்' எனச் சத்தம் கேட்கும்; இப்படி காதில் அடிக்கடி ரீங்காரம் கேட்பது, எந்த மாதிரியான உடல் பிரச்னைகளைக் குறிக்கிறது என்பதைப் பற்றி என்றாவது சிந்தித்துள்ளோமா? அதிக இரத்த அழுத்தம் (High blood pressure / blood flow changes) தான் இதற்கான முதல் காரணம்; ஆம், இரத்த ஓட்டம் அதிகமாக இருந்தாலும், கழுத்து மற்றும் தலை இரத்த நாளங்களில் மாற்றம் ஏற்பட்டாலும்கூட இந்த ஒலி கேட்கும் என்கிறது மருத்துவம்; மேலும், லவுட் ஸ்பீக்கர், ஹெட்போன், தொழிற்சாலை போன்ற அதிக ஒலி கேட்பது (Noise exposure) காதின் உள்ளே உள்ள நரம்புகளைப் பாதித்து ரீங்காரம் ஏற்படலாம்; காதில் சேரும் அதிகப்படியான எண்ணெய் (Earwax) அடைப்பு, காதின் உள்ளே சமநிலை நரம்புப் பிரச்னைகள் (Inner ear imbalance), அதிகமான வலி நிவாரணிகள் (aspirin in high doses) மற்றும் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பக்கவிளைவுகள், வயது அதிகரிக்கும்போது ஏற்படும் காது கேளாமை (age-related hearing loss) போன்ற பல பிரச்னைகளைக் குறிக்கிறது என்பது அதிர்ச்சி தரும் தகவல் அல்லவா?!

4. அதிக முடி உதிர்வு:

அதிகமாக முடி உதிர்வது (Hair fall / Hair loss) பொதுவாக இரும்புச் சத்துக் குறைபாடாகவே (Iron deficiency / Anemia) எண்ணுகிறோம்; ஆனால், முடி உதிர்வு பலவித உடல் உபாதைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முடி உதிர்வு? இதோ அதற்கான தீர்வு!
Physical symptoms and effects

ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal changes), தைராய்டு பிரச்னை (Hypo/Hyperthyroid), பிரசவத்திற்குப் பிறகான முடி உதிர்வு (Post-partum hair fall), மெனோபாஸ் காலம், ஊட்டச்சத்து குறைபாடு (Nutritional deficiency), அதிக மன அழுத்தம் (Stress), தலையின் தோல் பிரச்னைகள் (Scalp conditions), கட்டுப்படுத்தாத நீரிழிவு (Uncontrolled diabetes) போன்ற பாதிப்புகள் இருப்பதை இந்த முடி உதிர்வு எடுத்துக்காட்டுகிறது.

5. வீக்கமான கால்கள்

கால்களில் வீக்கம் (Leg / Foot Swelling – Edema) என்பது உடலின் பல பிரச்னைகளைக் காட்டுகிறது; விரலால் கால் மேற்பரப்பை அழுத்தினால் (Finger test) குழி போன்று தோன்றி சில விநாடிகள் நீடித்தால், அதை 'பிட்டிங் எடிமா' (Pitting Edema) என்று அழைப்பார்கள், இது குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கு ஒரு சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

நீண்ட நேரம் நின்று/அமர்ந்து இருப்பது, இரத்த ஓட்டம் (Blood circulation) மெதுவாவது (இது பொதுவானது), வேரிகோஸ் வெயின்ஸ் (Varicose veins) எனப்படும் காலின் நரம்புகள் பலவீனமடைவது, உடலில் தண்ணீர் தங்கி ஏற்படும் சிறுநீரகப் பிரச்சினை (Kidney Problem), இதய பலவீனம் (Heart failure), வயிற்றில் நீர் சேர்வதால் உருவாகும் கல்லீரல் பாதிப்பு (Liver problems), நிணநீர் அடைப்பு (Lymphatic blockage) காரணமாக ஒரு கால் மட்டுமே கடுமையாக வீங்குதல், கர்ப்பகால ஹார்மோன் மாற்றம் (Pregnancy hormone changes), மருந்துகள் பக்கவிளைவுகள் (Side effects of medicines) போன்ற பிரச்னைகளின் வெளிப்பாடாகவே கால்கள் வீங்கி, நமக்கு எச்சரிக்கை விடுகின்றன!

6. விரல்கள் மரத்துப்போதல்

விட்டமின் பி12 (Vitamin B12) மற்றும் டி (Vitamin D) அளவு குறைவாக இருப்பது விரல்கள் மரத்துப்போவதற்கான (Numbness in fingers) பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது; ஆனால் இது நரம்பு, இரத்த ஓட்டம் அல்லது உடல் ஹார்மோன் பிரச்னைகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் நோய் காட்டும் கண்ணாடி நாக்கு!
Physical symptoms and effects

மேலும், தைராய்டு குறைபாடு (Hypothyroidism), நரம்பு அழுத்தம் (Nerve compression), கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) எனப்படும் மணிக்கட்டு நரம்பு பாதிப்பு, கழுத்து நரம்பு அழுத்தம் (Cervical spondylosis) அல்லது கழுத்து வலி, தமனிகளில் (arteries) இரத்த ஓட்டக் குறைபாடு, நீரிழிவு (Diabetes) போன்ற பல உடல் பாதிப்புகளின் காரணமாகவும் மரத்துப் போதல் நிகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com