ட்ரெண்டாகி வரும் நீர் நடைப்பயிற்சி - செய்வது எப்படி? நன்மைகள் இருக்கா?

water walking
water walking
Published on

நடைப்பயிற்சி செய்வது அதிக ஆரோக்கிய நன்மைகள் அளிக்கும் என்று அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் நடைப்பயிற்சியில், ஏராளமான வகைகள் உண்டு என்பதை அறிந்திருக்கிறீர்களா? அனைத்து நடைப்பயிற்சிகளும் தனித்தனி ஆரோக்கிய நண்மைகளை கொண்டவை. இதில் ஒன்றான நீர் நடைப்பயிற்சியை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

இந்த நீர் நடைபயிற்சி தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆம்! வாட்டர் வாக்கிங் (Aqua Walking) என கூறப்படும் இந்த நடைப்பயிற்சி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாகவும், எளிமை மற்றும் உடலிற்கு பயனுள்ளதாகவும் அமைகிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நீர் நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தண்ணீரில் நேரத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், மன அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்களும் இந்த நடைபயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும்.

இதை எப்படி செய்வது? இதில் அப்படி என்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள தொடந்து படிக்கவும்.

நீர் நடைபயிற்சி செய்வது எப்படி?

விரைவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நீர் நடைபயிற்சி ஒரு சிறந்த தேர்வாகும். இதை செய்யும் போது சில விஷயங்களைக் கவனிக்க மறந்துவிடக் கூடாது. அதாவது, இந்த நடைப்பயிற்சியை சரியாக செய்யாவிட்டால், உடல் கடுமையாக சோர்வடையும். அதனால் இந்த பயிற்சியில், நீரில் நடக்கும் போது விறுவிறுப்பாக நடக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும், தண்ணீர் இடுப்பு அல்லது மார்பு வரை கூட இருக்கலாம். இதற்கு ஒரு கடற்கரை அல்லது ஒரு நீச்சல் குளத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதோடு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நீர் நடைபயிற்சி செய்யலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
water walking

நீர் நடைபயிற்சியின் ஆரோக்கிய நன்மைகள்

  • வழக்கமான நடைப்பயிற்சி போல் இல்லாமல், நீர் நடைப்பயிற்சியில் முழு உடலையும் ஈடுபடுத்த வேண்டும். அதாவது இதில், தண்ணீருக்குள் செல்லும் போது, ஒருவரின் கால்கள், கைகள் மற்றும் முதுகு தசைகள் கூட வேலை செய்யும்.

  • இந்த நடைப்பயிற்சி செய்வதனால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

  • இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.

  • மேலும் மனஅழுத்தம், பதற்றம், மனசோர்வு போன்றவற்றை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

  • இது உடல் பருமனைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

  • வழக்கம் போல வாக்கிங் செல்வது சில சமயங்களில் மூட்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த நீர் நடைபயிற்சியில் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படாது.

  • அதோடு, இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் தாக்கத்தினையும் இது குறைக்கிறது.

  • உண்மையில், வயதானவர்களுக்கு நிலத்தில் நடப்பதை விட, நீர் நடைபயிற்சி சிறந்தது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

இவ்வளவு நன்மை அளிக்கும் இந்த நீர் நடைப்பயிற்சியை யார் வேண்டுமானால், மேற்கொள்ளலாம். ஆனால் சற்று கவனமுடன் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த பயிற்சியை செய்ய நீங்கள் கடற்கரை, குளம் என  தேர்ந்தெடுப்பதால் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com