கண்களில் நீர் வருகிறதா? சாதாரணமாக நினைக்க வேண்டாம்!

கண்கள் சாதாரணமாக அடிக்கடி கலங்கி கொண்டே இருந்தால், அது கண் பாதிப்பு அடைந்ததுள்ளது என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கும்.
eye watering
eye watering
Published on

ஒரு சிலருக்கு இயல்பான நேரத்தில் அடிக்கடி கண்களில் இருந்து நீர் வடியலாம். நாம் இதை எப்போதும் நிகழும் சாதாரண விஷயம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஒரு சில நாட்களுக்கு எப்போதாவது ஒருமுறை கண்களில் இருந்து நீர் வடிவது , ஒரு பெரிய பிரச்னை அல்ல. சில நேரங்களில் உடல்சூடு அதிகமாக இருக்கும் போது கண்கள் சூட்டினால் கலங்கி கண்ணீர் வடியலாம். குளிர்ந்த காற்று, தூசி, புகை, அதிக நேரம் கணினியை பார்ப்பது ஆகியவற்றால் கண்கள் கலங்குவது ஒரு சாதாரண விஷயம் தான்.

இது போன்ற சூழல்கள் எதிலும் இல்லாமல், சாதாரணமாக கண்கள் அடிக்கடி கலங்கி கொண்டே இருந்தால், அது கண் பாதிப்பு அடைந்ததுள்ளது என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கும். நோய் தொற்றுகள், ஒவ்வாமை அல்லது தூசிகள் கண்களுக்குள் பட்டு உறுத்துவதால் கண்கள் கலங்கி நீர் வடியலாம். சிலருக்கு வயது முதிரும் போது கண்ணீர் குழாய்கள் தளர்வடைந்து விடுவதால், அதிகமாக நீர் வடியும்.

இது முதிர்வு காரணத்தினால் மட்டும் வெளியேறினால் பெரிய தீமை எதுவும் இல்லை. ஆனால், வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா என்றும் ஆராயப்பட வேண்டும். சில நேரங்களில் இது கடுமையான கண் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கண்கள் துடிப்பதன் அர்த்தம்: இது உங்களுக்குத் தெரியாத அதிர்ச்சியான உண்மைகள்!
eye watering

கண்களில் நீர் வடிதல், அரிப்பு, நமைச்சல் கண்களில் கனமான ஒரு உணர்வு ஆகியவை கண்கள் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன. சிலருக்கு ஒளியை பார்க்கும் போது கண்கள் கூசலாம், இது பொதுவானது என்றாலும், அவர்கள் வெயிலில் சாதாரணமாக தரையைப் பார்த்தால் கூட அந்த ஒளி அவர்களின் கண்களை கூச வைக்கும். இது விழித்திரையின் பலவீனத்தை காட்டுகிறது. எனவே, இதுபோன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது.

சில கண்ணீர் நோய்கள் :

உலர் கண் நோய்:

சிலருக்கு நோய்வாய்ப்பட்ட சூழலில் கண்களில் உள்ள திரவம் வற்றிவிடும். கண்களின் வறண்ட சூழலை போக்க, கண்ணீர் சுரப்பிகள் நீரை உற்பத்தி செய்கின்றன. அவை சரியான அளவை விட அதிக அளவில் நீரை உற்பத்தி செய்வதால் , அடிக்கடி கண்களில் நீர் வடிகிறது.

ஒவ்வாமை கண் அழற்சி:

கடுமையான ஜூரம், அல்லது கண்ணில் ஏற்படும் தொற்று காரணமாக , கண்கள் சிவந்து நீர் வடிந்து கொண்டிருக்கும். சில சமயம் மெட்ராஸ் ஐ போன்ற சீசன் நோயால் கூட கண் பாதிக்கப்படும் .

கண் ஜவ்வு அழற்சி:

கண் இமைகளில் ஏற்படும் சிறிய சூட்டுக் கட்டி , சிறிய வீக்கம் , சிறிய காயம் ஆகியவற்றால் கார்னியா அழுத்தப்பட்டு கண்களில் வேதனையை ஏற்படுத்தும் . இதனால் வலியுடன் நீர் வெளியேறும். சில சமயங்களில் நீருடன் சீழும் வெளியேறும்.

கண் அழுத்த நோய்:

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் மற்றும் உயர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , கண் அழுத்த நோய் உண்டாகிறது. கண்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால் நீர் வருகிறது. சில நேரம் கார்னியாவில் ஏற்படும் தொற்று அல்லது கண்ணீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்ற காரணங்களாலும் கண்ணீர் பெருகி வரலாம் . இது மோசமான கண் நோயாக பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் அலட்சியம் செய்தால் பார்வை மொத்தமாக பறிபோகும் அபாயம் உள்ளது.

கண்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகள்:

இதையும் படியுங்கள்:
கண்கள் துடித்தால்... உன் கண்கள் துடித்தால்...?
eye watering
  • தினமும் இரண்டு முறையாவது கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

  • எப்போதும் வெளியே செல்லும்போது சன் கிளாஸ்களை அணிந்து செல்லவும். இது சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கும்.

  • வாகனங்களில் செல்லும்போது தூசிகளில் இருந்து தப்பிக்க கண்ணாடி ஒன்றை பயன்படுத்தவும்.

  • இதே முறையை கணினி உபயோகத்தின் போதும் பின்பற்றவும்.

  • கண்களை அடிக்கடி தொடுவதும் தேய்ப்பதும் தவிர்க்க வேண்டும்.

  • கண்ணில் அதிகப்படியான நீர் வடிந்தாலும் வலி அல்லது சிறிய பார்வை குறைபாடு ஏற்படுவது போல் தெரிந்தாலும், உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com