Weight Loss என்கிற சொல் இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம்தான். நாம் சாப்பிடும் உணவு நாம் செய்யும் உடற்பயிற்சி எல்லாம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ‘ஜீரோ கலோரி’ உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஜீரோ கலோரி உணவுகள் என்றால் என்ன?
ஜீரோ கலோரி என்ற சொல் ஒரு உணவில் கலோரிகள் இல்லை என்பதைக் குறிக்கிறது. கலோரிகள் என்பவை உணவில் உள்ள சத்துக்கள். நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகள் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஆனால், ஜீரோ கலோரி உணவுகளில் கலோரிகள் இல்லாததால் அவை எந்தவிதமான ஆற்றலையும் நமக்குத் தருவதில்லை. உண்மையில் சத்துக்களே இல்லாத உணவுகள் என்று இயற்கையில் இல்லை. ஏனென்றால், எல்லா உணவுகளிலும் ஏதோ ஒரு அளவுக்கு கலோரிகள் இருக்கும். ஆனால், சில உணவுகளில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய உணவுகளைதான் நாம் ஜீரோ கலோரி உணவுகள் என்று அழைக்கிறோம்.
ஜீரோ கலோரி உணவுகளின் நன்மைகள்:
ஜீரோ கலோரி உணவுகளில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை அதிக அளவில் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. பெரும்பாலான ஜீரோ கல்லூரி உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இது நம் செரிமானத்தை சீராக வைத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். மேலும், இந்த உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். இதில் நீர் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என்பதால், நம் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
ஜீரோ கலோரி உணவுகள்:
காய்கறிகள் - வெள்ளரிக்காய், தக்காளி, கீரை, ப்ரோக்கோலி, கேரட்.
பழங்கள் - ஸ்ட்ராபெரி, வாழைப்பழம், ஆப்பிள்.
பருப்பு வகைகள் - பச்சைப்பயிறு, துவரம் பருப்பு.
இந்த ஜீரோ கலோரி உணவுகள் எடை இழப்புக்கு உதவும் என்றாலும், இவை மட்டுமே உடல் எடை குறைப்புக்கு போதாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே முக்கியம். மேலும், எந்த ஒரு உணவையும் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. எனவே, ஜீரோ கலோரி உணவுகளை சமச்சீர் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.