உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனைவரும் கேட்டிருக்க கூடும். சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. நாம் தினசரி பயன்படுத்தும் இந்த உப்பில், சாதாரண உப்பை தவிர ஆரோக்கியம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பயன்படுத்துவது 'இந்துப்பு' என்கிற 'இளஞ்சிவப்பு உப்பு'.
பல வருடங்களுக்கு முன் பூமியின் தட்டுகள் நகர்ந்து வானம் அளவு உள்ள உயர்ந்த இமயமலையில் நகர்வு ஏற்பட்டு சூரிய வெப்பத்தின் கீழ் கடல் நீர் ஆவியாகி பின் உப்புப் படிகங்களாக மாறியது. இந்த இளஞ்சிவப்பு உப்பைத் தான் இமாலய உப்பு என்கின்றனர். இது ஏராளமான நன்மைகளை நமக்கு தருகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இது சிறிது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இமயமலையிலும், வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகிய இடங்களிலும் பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தாமிர சத்து போன்ற பலவித சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் கொடுத்துள்ளது.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்துப்பு உங்கள் தசைகளில் உள்ள பிடிப்பைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்துப்பை ஏன் தினமும் உட்கொள்ள வேண்டும் என்பதையும், தினமும் இந்துப்பை உட்கொள்வதால் என்ன நன்மைகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
தசைப்பிடிப்புகளை நீக்கும் :
இந்துப்புவில் பல்வேறு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், சில தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை போக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தசைப்பிடிப்பு பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்துப்பை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் தீர்வினை பெறலாம். மேலும் தசைகளில் வீக்கம், வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் இந்துப்பை கலந்து குடிக்கலாம். எனினும் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.
செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் :
ஆயுர்வேத மருத்துவத்தில் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிற்றுப்புழுக்கள், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட செரிமான தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றுவலி அதிகமாக இருந்தால், தயிரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி சேர்த்து இந்துப்பு கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
தொண்டை வலிக்கு தீர்வு:
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தொண்டைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். இந்த பிரச்சனையை சமாளிக்க இந்துப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் இந்துப்பை கலந்து வாய் கொப்பளிக்கவும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்:
இந்துப்பை உட்கொண்டால் அது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தும். அலர்ஜி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கல் உப்பை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஈறு பிரச்சனைக்கு தீர்வு:
பற்களில் வலி, வீக்கம் போன்ற ஈறு பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்துப்பை பயன்படுத்தலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் இந்துப்பைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம்:
இது உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த உப்பை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது மற்ற உப்புகளை போன்று உங்கள் உடலில் சோடியத்தின் அளவை எக்காரணத்தைக் கொண்டும் கூட்டாது.
இரத்த குழாய்கள்:
இந்த உப்பை தொடர்ந்து உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்கள் இரத்த குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த சிரைகளில் ஏற்படும் வெரிகோஸ் வென்ஸ் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், உங்கள் அன்றாட உணவில் இளஞ்சிவப்பு உப்பைச் சேர்ப்பது இயற்கையான நன்மைகளை பெற ஒரு சிறந்த வழியாகும். இளஞ்சிவப்பு உப்பில் வழக்கமான டேபிள் உப்பைப் போலவே சோடியம் இருந்தாலும், அது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் அத்தியாவசிய தாதுக்களின் தடயங்களைக் கொண்டுள்ளது.