வெண்ணெய், நெய் இரண்டில் எது ஆரோக்கியமானது?

நெய், வெண்ணெய்
நெய், வெண்ணெய்
Published on

நெய் மற்றும் வெண்ணெய் இரண்டும் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.

நெய்யின் ஊட்டச்சத்துகள்: வெண்ணெய்யை வேக வைப்பதன் மூலம் நெய் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள நீர் உள்ளடக்கம் மற்றும் பால், தயிர் போன்ற திடப்பொருட்கள் அகற்றப்படுகின்றன. இதன் விளைவாக அதிக செறிவூட்டப்பட்ட கொழுப்பு தயாராகிறது. இதில் லாக்டோஸ் அல்லது கேசீன் இல்லாத தூய கொழுப்பு உள்ளது. எனவே. பால் உணர்திறன் உள்ளவர்களுக்கு இது ஏற்றது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ மற்றும் ப்யூட்ரேட் ஆகியவை நிறைந்துள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

வெண்ணையை விட நெய்யில் அதிக ஸ்மோக் பாயிண்ட் உள்ளது. 485 டிகிரி பாரன்ஹீட். இது அதிக வெப்ப சமையலுக்கு (டீப் ஃப்ரை) மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வெண்ணெய்யின் ஊட்டச்சத்துகள்: இதில் லாக்டோஸ் மற்றும் கேசீன் உள்ளிட்ட பால் திடப்பொருள்கள் உள்ளன. நீர் மற்றும் பட்டர்ஃபேட் ஆகியவையும் உள்ளன. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவை உள்ளன. இதில் எண்பது சதவீத கொழுப்பும் 16ல் இருந்து 18 சதவீதம் வரை தண்ணீரும் உள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் ஒரு சிறிய அளவு டிரான்ஸ் கொழுப்புகள் இரண்டும் உள்ளன.

நெய்யின் ஆரோக்கிய நன்மைகள்: இதில் லாக்டோஸ் மட்டும் கேசீன் இல்லாததால் பால் உணர்திறன் மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. உணவுப் பொருட்களை டீப் ஃபிரை செய்யும்போது தீங்கான சேர்மங்களாக உடைந்துபோகாமல், வறுக்கவும் வதக்கவும் உதவுகிறது.

நெய்யில் ப்யூட்ரேட்டின் அதிக செறிவுத்தன்மை உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். இது வீக்கத்தை குறைக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளும் அளவாக இதை எடுத்துக் கொள்ளலாம். வெண்ணையை விட அறை வெப்ப நிலையில் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்.

வெண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்: வெண்ணையில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை உள்ளன. இதில் லினோலிக் அமிலம் மற்றும் பியூட்டிரேட் ஆகியவை உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. வெண்ணெய் சுவை மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. இதன் கிரீமி அமைப்பு சமையலுக்கும், பேக்கிங் உணவுப் பொருட்களின் மேல் தடவவும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
மன இறுக்கத்தைப் போக்கி மகிழ்ச்சியை மலரச் செய்யும் 5 யோசனைகள்!
நெய், வெண்ணெய்

சமையல் மற்றும் உணவுப்பொருட்களில் வெண்ணெய் மற்றும் நெய்யின் பயன்பாடுகள்: இனிப்புகள் செய்யவும் பலகாரங்கள் சுட்டு எடுக்கவும் நெய் பயன்படுகிறது. சமையலில் வறுக்கவும், பொரிக்கவும், சாம்பார் சாதம், பருப்பு கீரையுடன் சேர்த்து உட்கொள்ள ஏற்றது. வெண்ணெய் பெரும்பாலும் காய்கறிகள் காளான்கள் அல்லது இறைச்சிகளை வதக்கவும் சாஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்தா, ரிசோட்டோ, கேரமல், டோஃபிகள் மற்றும் பட்டர்ஸ்காட்ச் தயாரிப்பதில் வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் விதம்: வெண்ணெய் மற்றும் நெய் இரண்டுமே கலோரிகள் நிறைந்தவை. எனவே, அதிகப்படியான கலோரி உட்கொள்ளலை தவிர்க்க இவற்றை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளவும். எடை மேலாண்மையை விரும்புவோரும், இதய நோயாளிகளும் மிகக்குறைந்த அளவில் இதை உண்ணலாம்.

பால் அல்லது பால் உணர்திறன் கொண்ட உணவை விரும்புபவர்கள் என்றால் லாக்டோஸ் மற்றும் கேசின் இல்லாத நெய் சிறந்த தேர்வாகும். வெண்ணெய் மற்றும் அதன் குறிப்பிட்ட சுவை அமைப்பை விரும்புபவர்களுக்கு வெண்ணெய் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com