வைட்டமின் டி குறைபாடு யாருக்கெல்லாம் வரும்? அதை நிவர்த்தி செய்வது எப்படி?

Vitamin D in sunlight
Vitamin D in sunlighthttps://barbend.com
Published on

வைட்டமின் டி உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பு வலி, தசை பலவீனம், புற்றுநோய், குழந்தைகளுக்கு கடுமையான ஆஸ்துமா, வயதானவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு போன்றவை ஏற்படும். யாருக்கெல்லாம் வைட்டமின் டி குறைபாடு வரும், அதை நிவர்த்தி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

யாருக்கெல்லாம் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்?: காலை சூரிய ஒளி உடல் மீது படும்போது உடல் வைட்டமின் டியை உருவாக்கிக் கொள்கிறது.

1. குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் வைட்டமின் டியை உடல் கிரகிக்கும் தன்மை குறையும். உலகின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு சூரியனின் அல்ட்ரா வயர்லெட் கதிர்கள் குளிர்காலத்தில் குறைவாகக் கிடைக்கும். குறிப்பாக, கனடா மற்றும் அலாஸ்கா போன்ற நாடுகளில். அதேசமயம் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில், பெரும்பான்மையான நேரத்தை வீட்டிற்குள்ளேயே கழிப்பவர்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு வரலாம்.

2. வெளியில் செல்லும்போது உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிந்தாலும் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி குறையும். ஏசி அறைகளிலேயே அமர்ந்து பணிபுரிவோருக்கும் வைட்டமின் டி குறைபாடு வரும்.

3. கருமையான சருமம் இருப்பவர்களுக்கு சருமத்தில் மெலனின் என்கிற நிறமி அதிகமாக இருக்கும். அவர்கள் வெளியில் செல்லும்போது சூரிய ஒளி, சருமத்தின் மீது வைட்டமின் டி உருவாக்கும் திறனை குறைக்கிறது.

4. புகைப்பிடிப்பவர்களுக்கு வைட்டமின் டி யை உற்பத்தி செய்யும் மரபணு பாதிக்கப்படுவதால் வைட்டமின் டி குறைபாட்டின் அளவு அதிகமாக இருக்கும்.

5. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு வரலாம். ஏனென்றால், தாய்ப்பாலில் வைட்டமின் டி குறைவாக உள்ளது. பச்சைக் குழந்தைகளை வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி வெளிச்சத்தில் அரை மணி நேரமாவது படுக்க வைப்பது நல்லது.

6. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாகவே உள்ளது. மேலும். கிரோன் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் செலியாக் நோய் போன்ற பிரச்னை காரணமாக வைட்டமின் டியின் அளவு குறைகிறது.

7. ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு வைட்டமின் டி அளவு குறையும். உணவில் போதுமான வைட்டமின் டி நிறைந்த மீன்கள், பால் பொருள்கள் இல்லாவிட்டாலும் குறையும்.

வைட்டமின் டியைப் பெறும் வழிமுறைகள்: மக்ரோல், சால்மன் போன்ற மீன் வகைகள், சீஸ், காளான்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சு சாறு, பால், சோயா பானங்கள் வெண்ணெய் போன்ற உணவுகளில் வைட்டமின் டி கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
Vitamin A குறைபாடு உடையவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்! 
Vitamin D in sunlight

ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சூரிய ஒளியில் செலவிடுவதன் மூலம் வைட்டமின் டியை சுலபமாகப் பெறலாம். தோட்டத்தில் தினமும் சிறிது நேரம் வேலை செய்வது, சூரிய ஒளி மிதமாக உள்ள காலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வது போன்றவை வைட்டமின் டி உற்பத்தி அதிகரிக்கும். சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செலவிடும்போது முகத்தில் பரு வராமல் காக்கும். சொரியாஸிஸ் நோயை தடுக்கும். குணப்படுத்தும்.

வைட்டமின் டி மாத்திரைகள் சாப்பிடும்போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உடலில் கால்சியம் அளவு அதிகமாகி சிறுநீரகத்தில் கல் உருவாகலாம் வைட்டமின் டி கிரீம்கள் மிகவும் விலை உயர்ந்தவை. உதாரணத்திற்கு 30 கிராம் வைட்டமின் டி க்ரீம்கள் 500 லிருந்து 1000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. வைட்டமின் டிக்கான ஸ்கிரீன் டெஸ்ட் எடுப்பது அவசியம் இல்லை என்று சில மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

எந்த நேரம் வெயிலில் வெளியே சென்றால் நல்லது? உச்சி வெயிலா, மாலையா, மதியமா, காலை நேரமா என்ற குழப்பம் நிறையப் பேருக்கு உண்டு. காலை நேரத்தில் ஒன்பது முதல் பதினோரு மணி வரை சூரிய ஒளியில் செலவிடுவதன் மூலம் வைட்டமின் டி யைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com