அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, கடல் உணவுகள், அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய், எருமைப்பால், டால்டா, பாமாயில், கடலை எண்ணெய், ஊறுகாய்கள், இறைச்சி ஆகியவற்றை தொடவே கூடாது.
நீரிழிவு நோயாளிகள் வெள்ளை அரிசி, பிரெட், பாஸ்தா, தானியங்கள், பிஸ்கட் மற்றும் வேகவைத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், உலர் பழங்கள் ஆகியவற்றை தொடவே கூடாது.
கர்ப்பிணிகள் பெரிய அளவில் உள்ள மீன்கள் மற்றும் கடல் உணவுகள், கத்தரிக்காய், அஜினோமோட்டோ, நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகள், அதிக அளவிலான காஃபி போன்ற உணவுகளை தவிர்த்தல் நல்லது.
வயதானவர்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு சுவைகளை வயோதிகத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். வெண்ணெய், நெய், எருமைப்பால், டால்டா, பாமாயில், இறைச்சி போன்றவற்றை தொடாமலே இருப்பது நல்லது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.