ஒற்றைக்கால் பயிற்சி
ஒற்றைக்கால் பயிற்சி

கால்களை ஏன் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்?

மக்கு வயதாகும்போது, நம் கால்கள் வலுவாக இருக்க வேண்டும். நீண்ட ஆயுளுக்கு வலுவான கால்கள் மிகவும் முக்கியம் மற்றும் அவசியமாகும். ஒற்றைக் காலில் குறைந்தபட்சம் 10 விநாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக பிரிட்டன் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையின் ஆய்வு கூறுகிறது. இத்தகையோரின் கால்கள் வலுவின்றி வழுக்கி விழும் அபாயம் உள்ளது. வலுவற்ற கால்களின் காரணமாக அவர்கள் வழுக்கி விழுந்து மரண அபாயத்தை சந்திக்கிறார்கள் என்கிறார்கள்.

தினமும் ஒற்றைக் காலில் நிற்கப் பயிற்சி செய்வோரின் கால்கள் வலுவாக இருக்கும் என்பதால் அவர்கள் சுலபமாக கீழே விழுந்து மரண அபாயத்தை சந்திப்பது குறைவு. ஒற்றைக் காலில் நின்று அடுத்த காலை நிற்கும் காலின் கணுக்காலில் இணைத்து வைத்து நிற்க வேண்டும். வயதாவதை கால்களின் இயக்கம் தள்ளிப்போடுகிறது என்கிறார்கள். உங்கள் கால்கள் இரண்டு வாரங்களுக்கு இயங்காமல் இருந்தால் அது உங்கள் ஆயுள் பலத்தை 10 ஆண்டுகள் குறைக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். வயதாவது உங்களின் அடி பாதத்தில் இருந்தே தொடங்குகிறது என்கிறார்கள். வயதாகும்போது உங்களின் மூளைக்கும், கால்களுக்குமான தொடர்பின் வேகம் குறைகிறது என்கிறார்கள்.

கால்களின் இரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்கிற வரை, கால்களின் தசைகள் பலமாக இருக்கும் வரை உங்கள் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உடலின் 50 சதவீத நரம்புகளும், இரத்த நாளங்களும் இருப்பது கால்களில்தான். இதன் வழியாகவே உடலின் மொத்த இரத்த ஓட்டமும் நடைபெறுகிறது. மனித இயந்திரத்தின் மையப்புள்ளியே உங்கள் பாதம்தான். மனித இயக்கம் 70 சதவீதம் நடைபெறுவதும், உடலுக்குத் தேவையான கலோரிகளை எரிக்கப் பயன்படுவதும் கால்கள் மூலமே.

உடலின் மொத்த எடையைத் தாக்குவதும் கால்கள்தான். உடலின் பெரிய மற்றும் பலமான எலும்புகள் வரை அனைத்தும் இருப்பது கால்களில்தான். இப்படிப்பட்ட கால்களின் ஆரோக்கியம்தான் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும். எனவே, கால்களுக்கு முறையான உடற்பயிற்சி தினமும் அவசியம். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடப்பது உங்களின் கால்களின் ஆரோக்கியம் காக்கும்.

இதையும் படியுங்கள்:
மனச்சோர்வை விரட்டும் மகத்தான 7 வழிகள்!
ஒற்றைக்கால் பயிற்சி

பொதுவாக, ஒரு நாளைக்கு ஒருவர் 10,000 அடிகள் எடுத்து வைத்தால் ஆரோக்கியம் சிறக்கும் என்பார்கள். ஆனால், அதை விட சிறந்தது ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் இயங்குகிறோம் என்பதுதான் என்கிறார் ஹெல்த் எக்ஸ்பர்ட் ஹார்வி லாடன். கடைக்குச் செல்வது, படி ஏறுவது, வேலைக்காக அலைவது போன்றவற்றைச் செய்யும் அதிக உடல் இயக்கம் காணும் நபர்கள் சர்க்கரை, இதய நோய், கேன்சர் போன்ற உடல் நலக்குறைவுகளில் இருந்து தப்பலாம் என்கிறார்கள்.

தினசரி கால் பயிற்சிகளை உங்கள் உடற்பயிற்சியில் சேர்த்துக்கொள்வது பல நன்மைகளை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட தசை வலிமையை கால் பயிற்சிகள் உங்களுக்கு வழங்கும். இது உங்கள் ஒட்டுமொத்த வலிமையையும் சகிப்புத் தன்மையையும் அதிகரிக்கும். குறிப்பாக, நீங்கள் வயதாகும்போது வீழ்ச்சி மற்றும் காயங்களின் அபாயத்தை இது குறைக்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

வலுவான கால் தசைகள் உங்கள் மூட்டுகள் மற்றும் தசைநார்களுக்கு கூடுதல் பலத்தை வழங்குகின்றன. காயங்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கின்றன. நடைப்பயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் பொருட்களை தூக்குதல் போன்ற அன்றாட நடவடிக்கைகள் வலுவான கால் தசைகளால் எளிதாகின்றன.

logo
Kalki Online
kalkionline.com