மூத்த குடிமக்களின் மூளை மேன்மையடைய உடற்பயிற்சி உதவுமா?

வயதானவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவர்களின் மூளை ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
exercise can help improve the brains of senior citizens
exercise can help improve the brains of senior citizens
Published on

உடற்பயிற்சி என்பது, பாலின பாகுபாடின்றி அனைத்து வயதினருக்கும் இன்றியமையாதது. வயதானவர்கள் வேலை செய்ய முடியாமல் வீட்டிற்குள் முடங்கி விட நேரும்போது அவர்களின் உடல் உறுப்புகள் இயக்கமின்றி, பல வகையான நோய்களுக்கு இடமளிக்க ஆரம்பிக்கும். மூளையின் செயல்பாடுகளும் திறன் குறைந்து ஞாபக மறதி போன்ற குறைபாடுகளை உண்டுபண்ணும். வயதானவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவர்களின் மூளை ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும். மூளை செல்கள் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் பெற்று சிறந்த முறையில் செயலாற்ற ஆரம்பிக்கும்.

2. உடற்பயிற்சி மூளையிலிருந்து உற்பத்தியாகும் BDNF புரோட்டீன் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் மூளையில் புதுப்புது செல்கள் உருவாகி உடலின் இயக்கத்தை மேம்படுத்தும்.

3. உடற்பயிற்சியின்போது உண்டாகும் இயக்கம், ஹிப்போகாம்பஸ் (Hippocampus)ஸின் செயல்பாடுகளை வலுவடையச் செய்யும். இதனால் ஞாபக மறதி குறைந்து நினைவாற்றல் பெருக வாய்ப்புண்டாகும்.

4. உடற்பயிற்சி ஒட்டு மொத்த உடலின் வீக்கங்களைக் குறைக்க உதவும். இதனால் மூளை விரைவில் மூப்படைந்து விடாமல் பாதுகாக்கப்படும். டிமென்ஷியா என்ற மறதி நோய் வரும் அபாயமும் குறையும்.

5. உடற்பயிற்சியின்போது சுறுசுறுப்புடன் உடல் இயங்குவதால், மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவும். செரோட்டோனின் மற்றும் டோப்பமைன் போன்ற இரசாயனங்கள் வெளிப்படும். இவை மூளையின் அறிவாற்றல் மற்றும் உணர்வுகளை சமநிலைப்படுத்தி வைக்க உதவும்.

6. உடற்பயிற்சி உடலின் அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்புடன் வைக்க உதவுகிறது. இதனால் மூளையின் செல்களில் சிதைவேற்படுவது தடுக்கப்பட்டு, பின்னாளில் டிமென்ஷியா எனப்படும், மூளையின் செயல்பாடுகளில் குறை உண்டாகும் நோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

7. இடைவிடாது தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி, ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு உதவி புரியும். இதனால் மூளைக்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் அறிவாற்றல் மேம்படும்.

8. தினசரி உடற்பயிற்சி, மூளையின் கூர்நோக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். இதனால் சிக்கலான வேலைகளிலும் அதிக கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

9. நம் உடலில் கார்ட்டிசோல் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து மன அழுத்தம் அதிகரிக்கும்போது மூளையின் செயல்பாடுகளில் குறை ஏற்படும். உடற்பயிற்சி, கார்ட்டிசோல் உற்பத்தி அளவைக் குறைத்து, மனதில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் பாதுகாக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
60+ வயதானால் உடற்பயிற்சி செய்யலாமா?
exercise can help improve the brains of senior citizens

10. நம் வயது கூடும்போது நம் மூளையின் திசுக்கள் சுருங்க ஆரம்பிப்பது இயல்பு. தினசரி உடற்பயிற்சி அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்பாக்கச் செய்வதால் மூளையின் திசுக்கள் சுருங்குவதில் தாமதம் ஏற்படும். உடல் இளமையை தக்க வைத்துக் கொள்ளும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com