70 வயதில் டிமென்ஷியா வராமல் தடுக்க 40 வயதில் செய்ய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

செப்டம்பர் 21 - உலக மறதி நோய் தினம்: பிற்கால மூளைப் பாதிப்புகளை முன்கூட்டியே தவிர்க்கும் மருத்துவ வழிகாட்டல்.
Alzheimer - அல்சைமர் மறதி நோய்
Alzheimer - அல்சைமர் மறதி நோய்
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

70 வயதில் உங்கள் நினைவாற்றலைப் பாதுகாக்க, 40 வயதிலேயே அதற்கான முன்னெப்புகளை தொடங்க வேண்டும். ஏனெனில், அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மூளை மாற்றங்களும், இரத்த நாளச் சேதமும், அதன் அறிகுறிகள் தோன்றுவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ஆரம்பகால இன்சுலின் எதிர்ப்பு போன்ற நடுத்தர வயதுப் பிரச்சனைகள், முதுமை வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மூளையில் உள்ள இரத்த நாளங்களை மறைமுகமாகச் சேதப்படுத்துகின்றன.

உங்கள் 40-களில் மேற்கொள்ளப்படும் சீரான மன மற்றும் உடல் செயல்பாடுகள், கூடுதல் நரம்பு இணைப்புகளை உருவாக்கி, பிற்காலத்தில் வயது தொடர்பான பாதிப்புகளை மூளை எதிர்க்க உதவுகின்றன. ஆபத்துக் காரணிகளை முன்கூட்டியே நிர்வகிப்பது, பிற்கால டிமென்ஷியா எனும் மறதி நோயை உண்டாக்கும் மூளை நச்சுகள் மற்றும் செல் அழுத்தங்கள் குவிவதைத் தடுக்கிறது.

டிமென்ஷியா நோய் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது நினைவாற்றல் இழப்பு, சிந்தனைத் திறன் குறைதல் மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் போவது போன்ற பல்வேறு அறிகுறிகளின் தொகுப்பாகும்.

70 களில் பொதுவாக சந்திக்கும் டிமென்சியா எனும் ஞாபமறதி நோயை தடுக்க உங்கள் 40களில் நீங்கள் எடுக்க வேண்டிய 10 முக்கிய நடவடிக்கைகள் என ஆய்வுகள் கூறும் விஷயங்கள்.

  • குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொழுப்பு அளவை பாருங்கள். பின்னர் அதற்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். தகுந்த உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும். 40 வயதில் அதிகப்படியான உயர் ரத்த அழுத்த பிரச்சினையில் அவதிப்பட்டு வருகின்றவர்களுக்கு பின்நாளில் ஞாபகமறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறார்கள் அயர்லாந்து நேஷனல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

  • வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உங்கள் வசதிக்கேற்ப தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மற்றும் தினமும் மேற்கொள்ளப்படும் வேகமான நடைப்பயிற்சி, மூளையின் முக்கிய நினைவாற்றல் மையமான ஹிப்போகேம்பஸிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

  • உங்கள் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரியுங்கள், நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிருங்கள்.

Alzheimer - அல்சைமர் மறதி நோய்
Alzheimer - அல்சைமர் மறதி நோய்
  • உணவில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களையும், கொட்டைகள் மற்றும் பலதரப்பட்ட தானியங்களையும் சேருங்கள். லீன் புரோட்டின் உணவுகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதே வேளையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கொழுப்பற்ற புரதங்கள் மற்றும் ஒமேகா-3 ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். 40 வயதிற்கு மேல் நொறுக்குத்தீனிகள் இல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மட்டுமே உண்பது செரியாமை, நெஞ்சு எரிச்சல், உறக்கமின்மை, மனச் சோர்வு மற்றும் உடல் எடை கூடுதல் என்று பல தொல்லைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது என்கிறார் சீன பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹான்ஸ் மில்.

  • புகையிலை மற்றும் மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. புகைப்பிடிப்பவர்களுக்கு நாளடைவில் அவர்களின் மூளை சுருங்கி அதன் விளைவாக அவர்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவதாக லண்டன் எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டாக்ஸி, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஆல்ஜைமர் நோய் வராது! ஏன் தெரியுமா?
Alzheimer - அல்சைமர் மறதி நோய்
  • உங்கள் கேட்கும் திறன் மற்றும் கண் பார்வையில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளையும் ஆரம்பத்திலேயே சரி செய்வது மிகவும் நல்லது. அவைகளில் குறைபாடு இருந்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • மன அழுத்தம் மற்றும் தனிமையில் அதிகம் இருப்பது போன்றவைகளை தவிர்க்க சமூக செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். மூளையின் கட்டமைப்புகளைச் சுருங்கச் செய்யக்கூடிய நாள்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் உணவு முறையையும் நிர்வகிக்கவும்.

  • ஆழ்ந்த உறக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தரமான ஓய்வு, மூளையில் தேங்கியுள்ள வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியேற்றவும் நினைவுகளைச் சேமிக்கவும் உதவுகிறது. தூங்கும் போது ஏற்படும் குறட்டை மற்றும் தூக்கமின்மை போன்றவற்றால் ஏற்படும் அவஸ்தையை தவிர்க்க உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முயலுங்கள்.

  • புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டு பயனுள்ள வழியில் பொழுதைக் கழிக்க முயலுங்கள். படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். புரிர், வார்த்தை விளையாட்டு போன்றவற்றில் நேரம் செலவழியுங்கள்.

இதையும் படியுங்கள்:
புகையிலை, சிகரெட் பழக்கம் இருக்கா? வாய் புற்றுநோய் (Oral Cancer) வராமல் தடுப்பது எப்படி?
Alzheimer - அல்சைமர் மறதி நோய்
  • நட்பு வட்டத்தை அதிகரியுங்கள், சமூக தொடர்புகளில் கவனம் செலுத்தி வாருங்கள். சமுதாய சேவைகள் சங்கங்களில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வரும் சாத்தியக் கூறுகள் பெருமளவில் குறைகின்றன. மற்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்களிடையே டிமென்சியா என்னும் மறதி நோய் குறைந்து காணப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. சமுதாய சேவைக் கூட்டங்களில் கலந்து கொள்வது, மனதிற்கு நல்ல சிகிச்சை தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com